புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2014



""ஹலோ தலைவரே... …  இந்திய அரசியலின் மூத்த தலைவரான கலைஞர் தன்னோட 91-வது பிறந்த நாளை கோடிக்கணக்கானவர்களின் வாழ்த்துகளோடு கொண்டாடியிருக்காரு. நம்மோட வாழ்த்துகளும் அதில் சேரட்டும். இந்த வயதிலும், இத்தனைத் தோல்வி யிலும் அரசியல் பணிகளைத் தொய்வின்றி கவனிக் கிறாரே! ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட தி.மு.க உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தின் தீர்மானங்கள் எப்படி?''

""ஜூன் 2-ந் தேதி நடந்த கூட்டத்தில் முக்கியமான சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்குதே! தேர்தல் நேரத்தில் 144 தடையுத்தரவு போட்டு, அ.தி.மு.க.வின் பணவிநியோகத்திற்கு உதவிய தேர்தல் ஆணையத்திற்குக் கண்டனம், கட்சிகள் வாங்கும் வாக்குகளின் அடிப்படையில் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தைக் கொண்டு வரும் வகையில் தேர்தல் சீர்திருத்தம் பற்றிய வலியுறுத்தல், கட்சி நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்யும் வகையிலும் மாவட்டக் கழக எல்லைகளை மாற்றியமைக்க ஒரு குழு நிர்ணயிப்பது, தேர்தல் தோல்விக்குப் பிறகு தி.மு.க.வினரும் நடுநிலையாளர்களும் கருத்து களைத் தெரிவித்துவரும் நிலையில் வேட்பாளர் களும் பொறுப்பாளர்களும் நேரடி அனுபவங் களை ஜூன் 15-ந் தேதிக்குள் அறிக்கையாகத் தரவேண்டும் என்றும் அதனைத் தலைமை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டிருக்குதுப்பா. அதிரடி நடவடிக்கைகளுக்கு கலைஞர் ரெடியாயிட்டாருங்கிறதைத்தானே இது காட்டுது?''

""தலைவரே.... உயர்நிலை செயல்திட்டக் குழுவில் விவாதங்களெல்லாம் சீரியஸாகவே நடந்திருக்குது. 2ஜி விவகாரம்தான் தி.மு.க.வின் தோல்விக்குக் காரணம்னு பிரச்சினையைக் கிளப்ப ஒரு குரூப் ரெடியாகுதுன்னு தெரிஞ்சதும், அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவங்களான ஆ.ராசாவும் கனிமொழியும் கூட்டத்தில் எதுவும் பேசலை. கட்சி நிர்வாகத்தில் மாற்றங்களை செய்யணும்ங்கிறதுதான் கலைஞர் ஏற்கனவே எடுத்த முடிவு. துரைமுருகன், டி.கே.எஸ்.இளங்கோவன் போன்றவர்களும் இதைக் கலைஞரிடம் வலியுறுத்தியிருப்பது பற்றி நாம பேசியிருக்கோம். குறிப்பா, மா.செ.க்களை மாற்ற ணும்ங்கிறதில் கலைஞர் இப்பவும் உறுதியாகத்தான் இருக்காரு. மு.க.ஸ்டாலினுக்கு அதில் உடன் பாடில்லை. உயர்நிலை செயல்திட்டக் குழுவில் தீர்மானங்களைப் படித்தவர் மு.க.ஸ்டாலின்தான். ஆனால், அவர் அதிகமா எதுவும் பேச வில்லை. கலை ஞர்கிட்ட தனிப் பட்ட முறையில், மா.செ. உள் ளிட்ட நிர்வாகி களை மாற்றுவது பற்றி தீவிரமா பேசிய துரை முருகன், இந்தக் கூட்டத்தில் பேசுறப்ப, காங்கிரஸ் கட்சியில் காமராஜர் கொண்டு வந்த கே ப்ளான் மாதிரி, தி.மு.க.விலும் கொண்டு வரணும்னாரு. அதாவது, சீனியர் மா.செ.க்களை ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டு, புதுமுகங் களைக் கட்சி வேலைகளுக்குக் கொண்டு வரணும்ங் கிறதுதான் துரைமுருகனோட ஐடியா. அதைத்தான் பூடகமா சொல்லியிருக்காரு. சுப்புலட்சுமி ஜெக தீசன் தான் நிலைமையை உடைச்சிப் பேசியிருக்காரு.''

""அவரும் சீனியராச்சே.. அனுபவத்தோடுதான் சொல்லியிருப்பார். என்ன சொன்னாராம்?''

""இப்ப இருக்கிற அமைப்புதான் இந்தத் தேர்தலில் நம்மோட தோல்விக்கு முக்கியமான கார ணம். இந்த அமைப்பு முறையை மாற்றிய மைக்கலைன்னா சட்டமன்றத் தேர்தலிலும் ஜெயிக்கிறதுக்கான வாய்ப்பு இல்லை. 2016-ல் ஜெயிக்கணும்னா, இப்ப இருக்கிற பல மா.செ.க்கள் உள்பட பல நிர்வாகிகளையும் மாற்றணும்னு சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசியிருக்காரு. மூன்று முறை மா.செ.க்களா இருந்தவங்களுக்கு மறுவாய்ப்பு கிடையாதுன்னு ஏற்கனவே கட்சியில் ஒரு தீர்மானம் போடப்பட்டது. ஆனா, நடை முறைப்படுத்தப்படலை. அதைப்பற்றியும் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்குது.'' 

""ரெஸ்பான்ஸ் எப்படி?''

""சீனியர் மா.செ.க்களான ஸ்டாலினின் ஆதர வாளர்கள் சிலருக்கு இதில் உடன்பாடு இல்லை. சுப்புலட்சுமியோட கருத்துக்கு மறுப்பு சொன்ன பொன்முடி, தேர்தல் தோல்விக் கான தப்பு எங்கே நடந்திருந் தாலும் நடவடிக்கை எடுங்க. ஆனா, மா.செ.க்கள்தான் முழுமை யான காரணம்னு முடிவு செஞ்சிடாதீங்க. இன்னும் பல காரணங்கள் இருக்குது. அதையும் ஆலோசிங்கன்னு சொல்லியிருக்காரு. சீனியரும் திருச்சி மா.செ.வுமான கே.என்.நேரு, மூன்று முறைக்கு மேலே ஒருத்தர் மா.செ.வா இருக் கக்கூடாதுன்னா, நல்லா வேலை செய்ற மா.செ.க் களுக்கு இதுதான் பரிசா? அப்புறம் எப்படி வேலை செய்வாங்க? தவறு செய்றவங்க மேலே நடவடிக்கை எடுங்க. வேணாம்னு சொல்லலை. ஆனா, பத்திரிகைகளிலே அவர் சரியில்லை, இவர் சரியில்லைன்னு எழுதுறத வச்சி இங்கே பேசாதீங்க. பெரும்பாலான பத்திரிகைகள் நமக்கு எதிராத்தான் எழுதுது. அவங்க என்ன உள்நோக்கத்தில் எழுதுறாங்கன்னு பார்க்கணும். கட்சி அழியட்டும்ங்கிற நோக்கத்தில் எழுது றாங்களா, கட்சி நல்லா இருக்கணும்னு நினைச்சி எழுதுறாங்களா? அதை கவனிச்சி நடவடிக்கை எடுங்கன்னு சொல்லியிருக்காரு.''

""அதற்கு கலைஞர் என்ன சொன்னாராம்?''

""பேராசிரியரைப் பார்த்த கலைஞர், நேரு சொல்றது சரிதான். என்ன நோக்கத்தில் எழுது றாங்கங்கிறது முக்கியம்னு சொல்லியிருக்காரு. தொடர்ந்து பேசிய நேரு, யார் சரியா வேலை செய்யலைன்னு விசாரிச்சி நடவடிக்கை எடுங்க. ஒட்டுமொத்தமா மா.செ.க்களை மாற்றுவதுங் கிறது எப்படி சரியா இருக்கும்னு கேட்டிருக்காரு. அப்ப துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரை சாமி, மாற்றினால்தான் சரியா இருக்கும்னு சொல்ல, ஆமா.. இவரு பெரிய பி.ஹெச்டி பண் ணிட்டு சொல்றாருன்னு நேரு கமெண்ட் அடித்திருக்காரு.'' 

""மற்றவங்க என்ன சொன்னாங்களாம்?''

""முன்னாள் எம்.பியான ஏ.கே.டி.ஜெயசீலன் பேசுறப்ப, கட்சித் தேர்தல் மூலமா மா.செ.க் களைத் தேர்ந்தெடுப்பதால்தானே அவங்களை நீக்க முடியாம, 5 வருடம் அப்படியே ஒட்டிக் கிறாங்க. அதனால ஜெ. பாணியில், நிர்வாகிகளை நியமனம் செய்யணும். அப்பதான் சரியா வேலை செய்யலைன்னா உடனடியா தூக்கிடமுடியும்னு சொல்லியிருக்காரு. தயாநிதி மாறன் பேசுறப்ப, அ.தி.மு.க.வோட பணவிநியோகமும் காங்கிரஸ் மீதான எதிர்ப்பலையும்தான் நம்ம தோல்விக்குக் காரணம். கட்சி நிர்வாகத்தில் மாற்றம் தேவைதான்னு சொல்லியிருக்காரு. ஃப்ளைட் லேட்டானதால தாமதமா வந்த திண்டுக்கல் மா.செ. ஐ.பெரியசாமி, ஒன்றிய செயலாளர்களை நியமனம் செய்யணும்னு சொல்லியிருக்காரு. ராம நாதபுரம் மா.செ. சுப.தங்கவேலன், ஜெ. மீதான சொத்துக்குவிப்பு கேஸில் கவனம் செலுத்தி, அந் தம்மா தப்பிக்காதபடி பார்க்கணும்னு சொல்ல, அது யார் காதிலும் விழலை. டி.ஆர்.பாலு அங்கிருந்த எல்லோரையும் பார்த்து, தலைக்கு மேல் கையைக்கூப்பிக் கும்பிட்டு, நான் ஒண்ணு சொன்னா தப்பா நினைச்சுக்காதீங்க. ப்ளீஸ் ப்ளீஸ். தேர்தல் அனுபவங்கள் பற்றி வேட் பாளர்கள் புகார் அறிக்கை கொடுக்கச்சொல்லி தீர்மானம் நிறைவேறியிருக்குது. அப்படி கொடுத்தா, நடவடிக்கை எடுப்பீங்களான்னு கேட்டிருக்காரு. ஏன் இவர் இப்படி கேட்குறாருன்னு மற்றவங்க குழம்ப, நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்னு கலைஞர் பதில் சொல்லியிருக்காரு.''

""அப்படின்னா அறிக்கைகள் குவிஞ்சிடுமே?''

""அதற்கு மா.செ.க்கள் அனுமதிப்பாங்களான்னு தெரியலை. ஒருவேளை வேட்பாளர்களும் தேர்தல் பொறுப்பாளர்களும் விடாப்பிடியா அறிக்கை அனுப்பினால் அதில் மா.செ.க்களோடு ஒ.செ.க்கள் மற்ற நிர்வாகிகள் பற்றியும் புகார்கள் இருக்கும். அப்படிப் புகாருக்குள்ளாகும் ஒ.செ.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சித் தேர்தலில் போட்டியிட முடி யாதபடி தடை விதிப்பதுன்னு ஆலோசனை நடந் திருக்குது. கலைஞரைப் பொறுத்தவரை, களை யெடுப்புக்கு ரெடியாயிட்டாரு. மா.செ.க்கள் மாற்றம் உள்பட கட்சி நிர்வாக சீர்திருத்தத்தில் உறுதியா இருக்காரு. ஸ்டாலினோ தன்னோட ஆதரவு மா.செ.க்களின் பதவி பறிபோகக்கூடாதுங்கிற கவனத் தில் இருக்காரு. கட்சியைக் காப்பாற்ற கலைஞர் எடுக்கப்போகும் நடவடிக்கைகளால் பலரும் பதைபதைப்பில் இருக்காங்க.''

""உனக்கொரு வரலாற்று விவரத்தை சொல்றேம்ப்பா.. 1925-ல் தமிழகத்தில் சுயமரியாதை இயக்கத்தை பெரியார் தொடங்கினாரு. அதுதான் பிறகு, நீதிக்கட்சியோடு இணைந்தது. சுயமரியாதை, சமூகநீதி, திராவிட இன உணர்வு, தமிழ் மொழி யுணர்வு, பகுத்தறிவுக் கொள்கைகள் இதெல்லாம் அதற்கப்புறம்தான் வேகமா பரவியது. அந்த வழியில் வந்த திராவிடக் கட்சிதான் தி.மு.க. அதுபோல, அதே 1925-ல்தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. இந்த மண்ணில் வர்க்க வேறுபாடு களை ஒழிச்சி பொதுவுடை மையை நிலைநாட்ட ணும்ங்கிற நோக்கத்தில் சுதந்திரத்திற்கும் முன்பும் பின்பும் பல போராட் டங்களை நடத்திய மாபெரும் இயக்கம்தான் கம்யூனிஸ்ட் இயக்கம். திராவிட அரசியல் இயக் கத்திற்கு தமிழகத்தில் படுதோல்வி ஏற்பட்டிருப்பதுபோல, பொதுவுடைமைக் கொள்கைக்கு இந்திய அரசியலில் பெரும் தோல்வி ஏற்பட் டிருக்குது. திராவிட கட்சியான தி.மு.க போலவே, கம்யூனிஸ்ட் இயக்கமான சி.பி.எம்.மும் தன் தோல்வி குறித்து ஆராய ஆரம்பிச் சிருக்குது.''

""ஆமாங்க தலைவரே.. .. …தமிழ் நாட்டில் இடது சாரி கட்சிகள் இரண்டும் ஓரணியாக நின்றும் டெபாசிட் தேறலை. இதுபற்றி மே 29,30 தேதிகளில் சென்னையில் நடந்த மாநிலக் குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் கலந்துக்கிட்டுப் பேசினாரே! உலகமயம், தாராளமயம்ங்கிற நவீன வடிவங்களில் சவாலாக நிற்கும் முதலாளித்துவத்தை எதிர்த்துப்போராட நாமும் பல ஆயுதங்களை எடுக்கிறோம். முதலாளித் துவமோ எப்படியாவது கம்யூனிசத்தை நசுக்கிவிட வேண்டும் என்ற வேகத்தோடு செயல்பட்டு தேர்தல் களத்தில் வெற்றி பெறுகிறது. நாம் இனி எந்த ஆயுதத் தைப் பயன்படுத்தவேண்டும் எனறு நமக்குத் தெரியவில்லை. இந்த எம்.பி தேர்தலும் நமக்கு கசப்பான பாடத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. அதிலிருந்து கிடைக்கும் படிப்பினை என்ன வென்பதைத் தெரிந்துகொள்வதற்காக ஒவ்வொரு மாநிலமாகப் பயணிக்கிறேன். இங்கே நீங்கள் சொல்லும் அனுபவக் கருத்துகளெல்லாம் அடுத்த மாதம் டெல்லியில் கூடும் மத்தியக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதனடிப்படையில் கட்சியைப் பலப்படுத்துவோம்னு பிரகாஷ் காரத் பேசினாரு.''

""தமிழகத் தோழர்கள் என்ன பேசினாங்களாம்?''

""மறைந்த தோழர் உமாநாத்தின் படத்திறப்பு விழாவில் சி.பி.எம்.மும் சி.பி.ஐ.யும் இணைய வேண் டும்னு நல்லகண்ணு பேசியதைக் குறிப்பிட்ட சி.பி.எம். மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழக சி.பி.ஐ.யில் தா.பாண்டியன் கோஷ்டி, சி.மகேந்திரன் கோஷ்டின்னு இரண்டு கோஷ்டிகள் இருக்குது. இப்படி கோஷ்டி அரசியலோடு செயல்படுபவர்களை சி.பி.எம்.மில் இணைத்தால் சரியாக இருக்குமான்னு கேட்க, இதை மத்திய கமிட்டியில் பேசும்போது சொல் லுங்கன்னு ஜி.ரா.கிட்டே காரத்தும் கே.வரதராஜனும் சொல்லியிருக்காங்க.'' 

""மாநிலக் குழுக்கூட்டத்தில் வேற யாரெல்லாம் பேசினாங்களாம்?''

""எம்.எல்.ஏ. கே.பாலகிருஷ்ணன்தான் தலைமை தாங்கிப் பேசினார். ராஜ்யசபா எம்.பியான டி.கே.ரங்கராஜன் பேசுறப்ப, கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திச்சதாலதான் நமக்கு ஓட்டுகள் குறைந்ததுன்னு வருத்தத்தோடு சொல்லியிருக்காரு. ஆனா உ.வாசுகியும் அ.சவுந்திர ராஜனும் பேசுறப்ப, சி.பி.எம். உறுப்பினர்களையும் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு. உறுப்பினர்களையும் சேர்த்தால் 35 லட்சம் உறுப்பினர்கள் எண்ணிக்கை வருது. இந்த ஓட்டுகளைக்கூட நம்மால கொண்டு வந்து சேர்க்க முடியலையே ஏன்னு கேட்டாங்க. தேர்தல் கள அனுபவம் பற்றி பேசிய வடசென்னை பொறுப்பாளர்கள், நாம் 80ஆயிரம் ஓட்டுகள் வாங்கி, தி.மு.க. வெற்றிக்கு உதவுவோம்னு மாநில அரசுக்கு உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருந்தது. கடைசியில், நாம் அதிகம் போராடிய நடைபாதை வியாபாரிகளின் ஓட்டுகளைக் கூட வாங்க முடியலை. மதுரை வேட்பாளர் விக்ரமன் பேசுறப்ப, தன்னோட வீட்டுக்கே அ.தி.மு.க.வினர் வந்து பணம் கொடுத்ததாக வும், அ.தி.மு.க.விடம் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் விலை போயிட்டாருன்னும் சொல்லியிருக்காரு. தமிழகத்தில் மோடி அலை இல்லைன்னாலும் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஓட்டுகள் பா.ஜ.க.வுக்கு கைகொடுத் திருக்குதுன்னு கோவை தோழர்கள் பேசினாங்க.''

""இதற்கெல்லாம் கட்சித்தலைமையின் பதில் என்ன?''

ad

ad