புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூன், 2014


தமிழ் பேசும் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தொடர்பில் தெற்கு அரசியல் கட்சிகளின் இழுபறி நிலை காரணமாக வெறுப்படைந்துள்ள தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்களின் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் தொடர்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டுமாயின் எதிரணி அரசியல் கட்சிகள் பொது மற்றும் யதார்த்தமான வேலைத்திட்டம் ஒன்று வருவது அவசியம்.
எனினும் தெற்கின் எதிரணி அரசியல் கட்சிகள் குழுவாதம்,தனி நபர்வாத அடிப்படையில் மாத்திரமல்லாது அதிஷ்டத்தின் அடிப்படையில் செயற்படும் நிலைமைக்கு சென்றுள்ளன.
தெற்கில் உள்ள எதிர்க்கட்சிகளின் இவ்வாறான செயற்பாடுகள் அதிகாரத்தை கைப்பற்ற தேவையான 51 வீத வாக்குகளை பெற முடியாது செய்து விடும் என தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
இப்படியான நிலைமையில், 51 வீதமான வாக்குகளை வெல்ல முடியாத பொது வேட்பாளர் எனக் கூறிக்கொள்ளும் தெற்கின் பொது வேட்பாளர் மீது நம்பிக்கையின்றி நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதற்கு பதிலாக தமிழ் பேசும் வேட்பாளர் ஒருவரை நிறுத்தி, இரண்டாவது விருப்பு வாக்கை தென் பகுதியின் வேட்பாளருக்கு வழங்குமாறு கூறுவதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் அடையாளம் மற்றும் அவர்களின் தேவைகளை குறைத்து மதிப்பிடாத பலமும் கட்டியெழுப்பப்படும் என்பது தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் நிலைப்பாடாக இருக்கின்றது.
தமிழ், முஸ்லிம் மக்களின் இந்த புதிய திட்டம் காரணமாக சிறுபான்மை வாக்குகள் தனக்கே கிடைக்கும் என எண்ணி செயற்பட்டு வரும் தெற்கின் பொது வேட்பாளர்கள் அனைவரும் இரண்டு முறையல்ல மூன்று முறை சிந்திக்க வேண்டிய நிலைமையேற்படும்.
சகல எதிர்க்கட்சிகளும் தனி நபர் நோக்கங்களை புறந்தள்ளி விட்டு ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடிப்பதை ஒரே இலக்காக கொண்டு செயற்படாது போனால் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாகவே இருக்கும் என சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

ad

ad