புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூன், 2014

தமிழர்களுக்கான நிரந்தரதீர்வைப் பெற அழுத்தம் கொடுங்கள்; சுவிஸ் தூதுவரிடம் அவைத்தலைவர் வேண்டுகோள் 
தமிழ் மக்களுக்கு ஒரு நிலையான தீர்வை வழங்குவதற்கு சுவிட்சர்லாந்து   இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வடக்கு மாகாண அவைத்த
லைவர் சீ.வி. கே சிவஞானம் தூதுவர் தோமஸ் லிட்செரிடம் தெரிவித்தார்.

யுத்தத்திற்கு பின்னர் வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி தொடர்பில் அறிந்து கொள்ளும் நோக்குடன் யாழ். மாவட்டத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண அவைத்தலைவரை சந்தித்து கலந்துரையாடினர். அதன்போதே குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டதாக சந்திப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்திற்குப்பின்னனர் வடக்கு மாகாண சபை தெரிவு செய்யப்பட்டு அதனூடாக மக்கள் சேவைகள்  நடைபெறுவதை தெளிவுபடுத்தினோம். அத்துடன் தற்போது பாரிய பிரச்சினையாக உள்ள காணி அபகரிப்பு இதனால் மக்கள் படும் இன்னல்கள் தொடர்பிலும் எடுத்துக் கூறினோம்.

இதன்போது வலி.வடக்கு விடயம் தொடர்பில் எடுத்துக் கூறியுள்ளதுடன் 24 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்தவர்கள் இன்னும் உயர்பாதுகாப்பு வலையம் என்று கூறி மீள்குடியேற்றப்படவில்லை. என்றும் தெரியப்படுத்தினோம். இதேவேளை வன்னிப்பகுதியில் இராணுவப் பிரசன்னம் அதிகமாகவும் பெரும்பாலான காணிகளை இராணுவம் கையகப்படுத்தியுள்ளதையும் எடுத்து விளக்கினோம். இதனால் எமது சுயமுயற்சிக்கும் காரணமாகும் .

அத்துடன் நிர்வாக ரீதியான பிரச்சினை குறித்து தெரியப்படுத்தினோம். அதில் மத்திய அரசு அதிகாரிகளது செயற்பாடுகள் எமது நடவடிக்கைக்கு பாதகமாக அமைகின்றது.  திணைக்களங்களில் இருந்து தகவல்களைப் பெறமுடியாத நிலை காணப்படுகின்றது. மனித உரிமைகள்  பாதிப்பு குறீத்து கூறியுள்ளோம்.  நியதிச்சட்டம் குறித்து தெளிவுபடுத்தியுள்ளோம்.

பொருளாதார ரீதியில் வடமராட்சி கிழக்கில் சுவிட்சர்லாந்து அரசினால் அமைக்க்பட்டு வரும் வீடமைப்பு தொடர்பிலும் கலந்துரையாடினோம். அதன்படி இன்னும் 400 மேற்பட்டவர்களுக்கு வீடுகள் தேவை என்பதையும் தெரிவித்துள்ளோம். மேலும் தற்போது வழங்கும் உதவித்திட்டங்களை தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளோம் என்றார்.

இந்த சந்திப்பில் உறுப்பினர்களான சிவமோகன், சர்வேஸ்வரன், சயந்தன், பசுபதிப்பிள்ளை, சுகிர்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ad

ad