புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூலை, 2014

சார்க் நாடுகளுக்காக செய்மதி அனுப்ப வேண்டும் : மோடி 
சார்க் அமைப்புக்களின் நாடுகளுக்காக செய்மதி ஒன்றை  விரைவில் உருவாக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய விஞ்ஞானிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

 
ஆந்திராவின்  ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெற்ற PSLV C-23 என்ற ஏவுகணையை விண்ணுக்கு ஏவுவதற்காக வைபவத்தில் இன்று முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் மோடி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
 
பிரான்ஸ், ஜேர்மன், கனடா மற்றும் சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த 05 செய்மதிகள் அடங்கிய ஏவுகணை இன்று முற்பகல் 9.52 மணியளவில் விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஏவுகணை விண்ணுக்கு ஏவப்பட்டதன் பின்னர் கருத்து வெளியிட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தெற்காசிய வலய ஒத்துழைப்பு சங்கத்திற்காக ஏவுகணை ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டுமென அவர் இதன்போது குறிப்பிட்டார்.
 
இந்த நடவடிக்கை சார்க் வலய நாடுகளுக்கு இந்தியா வழங்கும் மிகச் சிறந்த பரிசு எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ad

ad