www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

வியாழன், ஜூன் 26, 2014""ஹலோ தலைவரே...…மா.செக்களுக்கு கல்தா, கிளைக்கழகங்கள் கலைப்புன்னு கலைஞ ரோட அதிரடி ஆக்ஷன் பற்றி முன்கூட்டியே சொன்னது நம்ம நக்கீரன்தான். முதல்கட்ட ஆபரேஷன் ஆரம்பமாயிடிச்சே...''

""தி.மு.க.வில் என்ன நடக்குதுங்கிறதை ஸ்டெப் பை ஸ்டெப்பா நம்ம நக்கீரன்தானே சரியா சொல்லிக்கிட்டிருக்குது. சனிக்கிழமையன்னைக்கு கலைஞர் எடுத்த நடவடிக்கையோட பின்னணி என்னவாம்?''

""தலைவரே... வெள்ளிக்கிழமையிலிருந்தே என்ன நடந்ததுன்னு சொல்றேன். மாவட்டங்கள் பிரிப்புன்னு தலைமை அறிவிச்சதுமே, சீனியர் மா.செ.க்களான முன்னாள் அமைச்சர்கள் எல் லோருமே பதட்டமாயிட்டாங்க. வழக்கமா கலை ஞரை அடிக்கடி சந்திக்கிற முன்னாள் மந்திரிகள் கூட, மாவட்ட பிரிப்பு அறிவிப்புக்குப் பிறகு சந்திக்கலை. அவங்களுக்குள்ளேயே தனித்தனியா ஆலோசிச்சிக்கிட்டிருந்தாங்க.'' 

""என்ன பேசினாங்களாம்?'' 

""இரண்டு முறைக்கு மேலே மா.செக்களா இருந்தவங்களை மறுபடியும் மா.செ.வாக்கக் கூடாதுன்னு 6 பேர் குழு வாய் மொழியா சொன்னதை, எழுத் துப்பூர்வமா கொடுங் கன்னு கலைஞரே கேட்டு வாங்கியிருக்கிறாருன்னா நிச்சயமா நம்ம பதவிகளைக் காலி பண்ணிடுவாருன்னு பேசிய சீனியர் மா.செக்கள், இனியும் சும்மா இருந்தா அவ்வளவுதான்னும் நேரா கலைஞரைப் போய்ப் பார்த்து பேசிடுவோம்னும் ஆலோசிச் சிருக்காங்க. கலைஞரை சந்திக்கிறதுக்கு முன்னாடி மு.க.ஸ்டாலினை சந்திச்சிடலாம்னு முடிவு பண்ணி, சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரோட வீட்டுக்குப் போனாங்க.''

""என்ன பேசினாங்களாம்?''

""தங்களோட பதவிகள் எப்படி ஊசலாடிக்கிட்டிருக்குன்னு நிலைமைகளை ஸ்டாலின்கிட்டே விளக்கி சொன்ன முன்னாள் அமைச்சர்கள், நீங்க பொறுப்பெடுத்துக் கணும்னு ஸ்டாலின்கிட்டே வலியுறுத்தியிருக் காங்க. நீங்க செயல்தலைவரா வந்தால் தான் இதையெல்லாம் சமாளிக்க முடியும். தலைவரால் இப்ப கட்சிப் பணிகளை முழுமையா கவனிக்க முடியலை. கூட்டத்தில் பேசவந்தால் கூட டயர்டாயிடுறாரு. அதனால நீங்க எல்லாத்தையும் கவனிக்கணும்னு ஸ்டாலின்கிட்டே சொல்லிட்டு, அங்கிருந்து கிளம்பி கலைஞர் வீட்டுக்கு வந்திருக் காங்க.'' 

 ""கலைஞர்கிட்டேயும் தங்களோட மனதில் உள்ளதை முன்னாள் அமைச்சர்கள் கொட்டுனாங்களா?''

""அங்கே போனதும் அப்படியே யு டர்ன் அடிச்சிருக்காங்க. நீங்க எடுக்கிற நடவடிக்கைகளுக்கெல்லாம் ஒத்துழைப்பு கொடுப்போம். உங்க கட்டளைக்கு எப்பவும் கீழ்படிஞ்சி நடப்போம். உங்களை மீறி ஒரு போதும் நடக்கமாட்டோம். நீங்க சொன்னா, மாவட்ட பொறுப்பிலிருந்து போயிடுறோம். கட்சி வளர்ச்சிக்காகத்தானே மாவட்டங் களைப் பிரிச்சிருக்கீங்க. அதில் எங்களுக்குத் துளி வருத்தம்கூட கிடையாது. தேர்தல் தோல்விக்கு மா.செ.க்கள் சிலரும் ஒரு கார ணமா இருந்திருக்காங்க. பழையவர்களும், புதியவர்களும் இணைஞ்சு செயல்படுவதும் நல்லதுதான்னும் சொல்லியிருக்காங்க.''

""கலைஞர் என்ன சொன்னாராம்?''

""மாவட்டப் பிரிப்புங்கிற அறிவிப்பிலிருந்து என்னென்ன நடந்ததுன்னு அவருக் குத் தெரியுமே.…அதனால முன்னாள் மந்திரி கள் பேசியதையெல்லாம் எந்தவித ரியாக்ஷ னும் காட்டாமல் கவனிச்சிக்கிட்ட கலைஞர், கட்சியில அண்ணா ஒரு முடிவெடுத்து அறி விச்சாருன்னா நாங்க உடனே அவர்கிட்டே ஓடிப்போவோம். அவர் எடுத்த முடிவுகளோட காரணங்களை எங்ககிட்டே சொல்லுவார். நாங்க எங்களோட கருத்துகளைச் சொல்லு வோம். எல்லாத்தையும் அலசி ஆராய்ந்து அந்த முடிவுகளை செயல்படுத்துவார். இதுதான்யா தி.மு.க. நீங்க என்னன்னா மாவட்டங்கள் பிரிப்புன்னு அறிவிச்சி இத்தனை நாள் கழிச்சி இப்ப வந்தி ருக்கீங்களேன்னு கேட்டிருக்காரு.'' 

""ம்...''

""அதே நேரத்தில், மு.க. ஸ்டாலின் ரொம்ப கோபமா இருந்தாரு. தனக்கு ஆதரவா இருக்கிற மா.செ.க்கள் தான் மாவட்ட பிரிப்பால பாதிக் கப்படுறவங்க. அதேநேரத்தில், கட்சிக்கு எதிராகவும் தனக்கு எதிராகவும் சிலர் இருக்காங்க. முதலில் அவங்க மேலே நடவடிக்கை எடுத்தால்தான் சரியா இருக்கும்ங்கிறது அவரோட நிலை.  மத்திய இணையமைச்சரா இருந்து கட்சியில யாருக்கும் எந்த உதவியும் செய்யாம, அ.தி.மு.க.வில் முக்கிய இடத்தில் இருக்கிறவங்களுக்கு உதவிகரமா செயல்பட்டவரு பழனிமாணிக்கம். அவர் தொடர்ந்து, தனக்கெதிரா செயல்படுறாருன்னு ஸ்டாலினுக்கு கோபம். தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட ஒத்துழைப்பு தரவில்லை யாம் மா.செ. அதுபோல, முல்லைவேந்தனும் தனக்கு சுமுகமா இல்லைங்கிறது ஸ்டாலினோட முடிவு. கலைஞரை மட்டுமே சந்திப்பதை வழக்கமா வச்சிருப் பார் முல்லைவேந்தன். அவரோட குடும்பத்தில் நடந்த கல்யாணத்துக்கு பத்திரிகை கொடுக்குறதிலேயே ஸ்டாலினோடு அவருக்கு விவகாரமாயிடிச்சி.  அதனால முல்லைவேந்தன் வீட்டுக் கல்யாணத்தை தன் வீட்டிலேயே தன் தலைமையில் நடத்தச் சொன்னார் கலைஞர்.  அடுத்ததா, ராஜ்யசபா எம்.பி. கே.பி .ராமலிங்கம்.''   

""அவர் அழகிரி ஆதரவாளர்ங்கிறதுதான் எல்லோருக்கும் தெரியுமே!''

""கே.பி.ராமலிங்கமும் நெப்போலியனும் அழகிரி யை வெளிப்படையாவே ஆதரிச்சாங்க. இதில் நெப் போலியன் அமெரிக்கா போயிட்டாரு. கே.பி.ராமலிங் கத்துக்கு இன்னும் 2016 வரை எம்.பி.பதவி இருக்குது. அதனால, விட்டுப்பிடிக்கலாம்னு சொல்லியிருக்காங்க. ஆனா, நடவடிக்கை எடுத்தாகணும்ங்கிறதில் ஸ்டாலின் உறுதியா இருந்திருக்காரு. அதோடு இரண்டு, மூணு நாளா கலைஞரை ஸ்டாலின் சந்திக்கவுமில்லை. இதை கவனிச்ச கலைஞர், என்ன ஆளையே காணோம். வெளிநாட்டுக்குப் போயிட்டாரான்னு விசாரிச்சிருக் காரு. இந்த நிலையில்தான் சனிக்கிழமையன்னைக்கு 6 பேர் குழுவில் உள்ள தங்கம் தென்னரசு, கல்யாண சுந்தரம் இருவரும் கலைஞரை சந்திக்கிறாங்கன்னதும் ஸ்டாலினும் கலைஞர் வீட்டுக்கு கிளம்பிட்டாரு.''

""எதற்காக இந்த சந்திப்பாம்?''

""வேட்பாளர்களும் தொகுதி பொறுப்பாளர்களும் அனுப்பியிருந்த புகார் கடிதங்களை அலசி ஆராய்ந்து யார்யார் மேலே நடவடிக்கை எடுக்க ணும்னு தங்கம் தென்னரசுவிடமும், கல்யாண சுந்தரத்திடமும் தனி ரிப்போர்ட் கேட்டிருந்தாரு கலைஞர். அது தொடர் பாக கலைஞரோடு நடந்த ஆலோசனை யின்போது ஸ்டாலினும் இருந்தாரு. டி.ஆர்.பாலுவுக்கு எதிரா பழனிமாணிக்கம் எப்படியெல்லாம் செயல்பட்டாருங்கிறது சம்பந்தமான புகார் ஆதாரங்களை கலைஞரிடம் காட்ட, அவர் அதிர்ந்து போயிட்டாராம். நீண்டநேரம் பேராசிரியரிடம் ஆலோசனை நடத்திய பிறகுதான் பழனிமாணிக்கம், முல்லைவேந்தன், கே.பி.ராமலிங்கம் உள்பட 30-க்கும் மேற்பட்ட பல நிர்வாகிகளை நீக்க அனுமதித்தாராம் கலைஞர்.'' 

""இதற்கு கட்சி நிர்வாகிகளிடம் என்ன ரியாக்ஷன்?''

""அதை நம்ம நக்கீரனில் படிக்கலாம்ங்க தலைவரே... ஸ்டாலின் சொன்னதாலதான் கலைஞர் இந்த நட வடிக்கை எடுத்திருக்காருன்னு நீக்கப்பட்ட நிர்வாகிகள் நினைப்பதால,  அவங்களோட ஆதரவாளர்களோ ஸ்டா லின் மேலே குற்றம்சாட்டுறாங்க. இவங்க மட்டும் வேலை பார்க்காததுதான் தோல்விக்கு காரணமா, மற்ற நிர் வாகிகள் வேலை பார்த்திருந்தா ஜெயிச்சிருக்கலாமேன்னு கேட்குறாங்க. மற்ற நிர்வாகிகளோ புதிய மாவட்டங்கள் பிரிப்பில் தங்களுக்கு என்ன கிடைக்கும்ங்கிற எதிர் பார்ப்போடு ஸ்டாலினை எதிர்நோக்கியிருக்காங்க.''

""மு.க.ஸ்டாலின் இது பற்றி என்ன ப்ளான் வச்சிருக்காராம்?''

""அவரைப் பொறுத்தவரை கட்சித் தலைவரான கலைஞர்கிட்டே நேரில் பேச ரொம்பவே தயங்குவார். ஒருவித பயம் கலந்த மரியாதையோடுதான் செயல்படு வாரு.  கலைஞர்கிட்டே யு டர்ன் அடிச்ச சீனியர் மா.செக்களோ, மாவட்ட பொறுப்பை விட்டுட்டு அறிவாலயத்தில் பொறுப்பு கொடுத்தாலும் போகக்கூடாதுன்னு நினைக்கிறாங்க. மாவட்டத்துக்கு எத்த னை சட்டமன்றத் தொகுதி இருந்தாலும் சரி, ஊரிலேயே இருந்திடணும்னு நினைக்கிறாங்க. கலைஞரோ, சீனியர் மா.செ.க்களையெல்லாம் மாத்தணும்ங் கிறதில் உறுதியா இருக்காரு. அமைப்புச் செயலாளர் பொறுப்பில் 10 பேர் அளவுக்கு நியமிச்சி, ஒவ்வொருத்தரை யும் அவங்களுக்குத் தொடர்பில்லாத ஏரியாவுக்குப் பொறுப்பாளரா போட்டு, கட்சிப்பணிகளை கவனிக்கச் சொல்ல லாம்ங்கிற ப்ளானில் இருக்காராம். கட்சியைக் காப்பதற்காக கலைஞர் வேகமா சாட்டைய சுற்ற ஆரம்பிச் சிட்டதால அடுத்ததா என்னென்ன நடக்கும்ங்கிற பதட்டமும் எதிர் பார்ப்பும் தி.மு.க.வில் பலமாகவே இருக்குதுங்க தலைவரே...''…

""தி.மு.க. தன்னோட உள்கட்சிப் பிரச்சினைகளில் மூழ்கிக் கிடப்பதாலேயும், மற்ற கட்சிகளும் அவங்கவங்க வேலைகளில் இருப்பதாலேயும் தமிழ்நாட்டுக்குள்ளே நைசா இந்தியைத் திணிச்சிடலாம்னு மோடி அரசு வேலை பார்க்க ஆரம்பிச்சிடிச்சே. சமூக வலைத்தளங்களில் இந்திக்கே முன்னுரிமை தரணும்னு மோடி அரசின் உள்துறை அனுப்பிய சர்க்குலர், மறைமுக இந்தித் திணிப்புக்கான திட்டம் தானே... எதிர்ப்பைப் பார்த்ததும் இது தமிழ்நாடு போன்ற இந்தி பேசாத மாநிலங்களுக்குப் பொருந் தாதுன்னு பின்வாங்கிடிச்சி.  மோடி அரசின் இந்தித் திணிப்புக்கு எதிரா கலைஞர்கிட்டேயிருந்து முதல் அறிக்கை வந்தது. கி.வீரமணி, வைகோ, ராமதாஸ்னு பல தலைவர்களும் குரல் கொடுத்தாங்க. முதல்வர் ஜெ.கிட்டேயிருந்தும் விரிவான அறிக்கை வந்தது. ஆனா அவரோட அறிக்கை வருவதற்கு முன்னாடியே  மத்திய அரசு பின்வாங்கிடிச்சி.''