புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2014


ஐ.நா விசாரணையாளருக்கு ஐ.தே.க, ஜே.வி.பி, மு.கா. மறைமுக ஆதரவு?
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு நடத்த உள்ள விசாரணைகளுக்கு இடமளிப்பதா, இல்லையா என்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு வாக்காளிக்காது தவிர்த்து கொண்டதன் மூலம் ஐ.தே.கட்சி, ஜே.வி.பி என்பன மறைமுகமாக ஆதரவை வழங்கியுள்ளதாகவும் நாட்டுக்கு எதிரான இந்த செயலை வன்மையாக கண்டிப்பதாகவும் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அந்த முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் இதனை கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்கா கொண்டு வந்த யோசனைக்கு அமைய இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராயும் விசாரணைக்கு இடமளிப்பதா, இல்லையா என்பதை அறிய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இடமளிக்க கூடாது என்பதற்கு 144 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், இடமளிக்கப்பட வேண்டும் என 10 வாக்குகள் அளிக்கப்பட்டன.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பியும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதுடன் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்றத்தை பகிஷ்கரித்தது.
உலக நாடுகளை தமது எண்ணத்திற்கு அமைய கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குல வல்லரசுகள் ஐ.நா, ஐ.நா பாதுகாப்புச் சபை மற்றும் மனித உரிமை பேரவை ஆகியவற்றை ஆபரணமாக பயன்படுத்தி வருகின்றன.
மனித உரிமை என்ற வார்த்தையை பயன்படுத்தி அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் சிரியாடு, ஈராக், லிபியா, சூடான் போன்ற நாடுகளை மிகவும் கவலைக்குரிய நிலைமைக்குள் தள்ளியுள்ளன.
இந்த நாடுகளில் எண்ணெய் வளத்தை சுரண்டுவதே இந்த மனித உரிமை என்ற வார்த்தையை மேற்குலக நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் சிரியாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விதத்தை பார்க்கும் போது அது அமுலில் இருக்கும் சட்டத்திட்டங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயற்பட்ட விதத்தை பார்க்கும் போது அவர் புலிகப் பயங்கரவாதிகளுக்கு சார்பாக செயற்பட்டு வந்துள்ளார்.
இலங்கை 30 வருடங்களா பயங்கரவாதத்தினால் துன்பங்களை அனுபவித்த நாடு. அமைதியை விரும்பும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் என அனைவரும் அந்த துன்பங்களை அனுபவித்தனர்.
எவ்வாறாயினும், புலிகளின் பயங்கரவாத்தை அரசாங்கத்தினால் தோற்கடிக்க முடிந்தது. புலிகளை அழித்தது, அவர்களின் எஜமானர்களான மேற்குலக நாடுகளால் பொறுத்து கொள்ள முடியவில்லை.
இதனால் மனித உரிமை மீறல் குற்றங்களை சுமத்தி, வெற்றி கொண்ட சமாதானத்தை மீண்டும் பிடிங்கி எடுத்து புலிகளுக்கு மீண்டும் உயிரூட்டவே மேற்குலக நாடுகள் முயற்சித்து வருகின்றன.
கஷ்டத்திற்கு மத்தியில் வெற்றி கொண்ட சமாதானத்தை பறிப்பதற்காகவெ மனித உரிமை என்ற போர்வையை போர்த்தி கொண்ட விசாரணைகளை அனுப்ப முயற்சித்து வருகின்றனர்.
நாடு என்ற வகையில் அந்த விசாரணையாளர்கள் இலங்கைக்குள் வர அனுமதிக்க முடியாது.
இது குறித்து அரசாங்கம் தீர்மானிப்பதை விட நாட்டு மக்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மூலம் தீர்மானங்களை எடுத்து உலகத்திற்கு தெரியப்படுத்துவது மிகவும் பலமானது.
நாடு என்ற வகையில் சகல அரசியல் கட்சிகளும் கட்சி பேதமின்றி அதனை எதிர்த்திருக்க வேண்டும். நாட்டை பற்றி சிந்தித்து இதன் போது செயற்பட்டிருக்க வேண்டும்.
எனினும் நாட்டுக்காக பணி செய்வதை புறந்தள்ளி விட்டு ஜே.வி.பி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பல்வேறு கதைகளை கூறி உலகத்திற்கு பலமான செய்தி தெரிவிக்க வேண்டிய சந்தர்ப்பத்தை தவறவிட்டன.
இதன் மூலம் இவர்கள் மறைமுகமாக விசாரணையாளர் இலங்கை வருவதை ஆதரித்துள்ளனர்.
அதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்தை பகிஷ்கரித்தனர்.
அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்களை காரணம் காட்டியே அவர்கள் இந்த பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.
எனினும் அன்று காத்தான்குடி, ஏறாவூர் பிரதேசங்களில் முஸ்லிம் மக்களை கொலை செய்த புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் கைகுலுக்கவும் உடன்படிக்கையில் கையெழுத்திடவும் ஹக்கீம் தயங்கவில்லை.
ஆனால் இன்று அளுத்கம என்ற துரும்புச் சீட்டை சுட்டிக்காட்டி சர்வதேச விசாரணைக்குழுவிற்கு இடமளிக்க நடவடிக்கை எடுத்துள்ளார் எனவும் முஸ்ஸாமில் குற்றம் சுமத்தியுள்ளார்.

ad

ad