புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2014


இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவராக மீண்டும் பா.உறுப்பினர் சிறீதரன்
கிளிநொச்சி மாவட்டத்தின் இலங்கை தமிழரசுக் கட்சிக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கட்சியின் தலைமைபீடத்திலிருந்து சிரேஸ்ட தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம், கட்சியின் பொருளாளார் கனகசபாபதி, நிர்வாக செயலர் குலநாயகம் ஆகியோரும் வடமாகாண சபையின் அமைச்சர் த.குருகுலராஜா, வடமகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம் ஆகியோரும் கலந்து கொண்டனர்
முன்னைய செயலாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான பசுபதிப்பிள்ளை கடந்த ஆண்டுகளில் கட்சியின் நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையினை சபையில் சமர்ப்பித்ததை தொடர்ந்து புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின்  கிளிநொச்சி மாவட்ட கிளையின் தலைவராக மீண்டும் பா.உறுப்பினர் சி.சிறீதரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
உப தலைவர்களாக பொன்.காந்தன் மற்றும் பூநகரியைச் சேர்ந்த செல்வராசா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
செயலாளராக மா.சிவபாலனும் பொருளாளராக சிறீரஞ்சனும் உப செயலாளராக பச்சிலைப்பள்ளியை சேர்ந்த மைக்கல் பிரான்சிஸ் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாக,
செ.புஸ்பராசா-கண்டாவளை பிரதேச செயலர் பிரிவு
சி.சிதம்பரநாதன்- கண்டாவளை பிரதேச செயலர்பிரிவு
விஜியகுமார் லட்ஸ்மன்-பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவு
கிருஸ்ணன் வீரவாகுதேவர்-பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவு
இ.பொன்னம்பலநாதன்-கரைச்சி பிரதேசசெயலர் பிரிவு
ப.சந்திரபாலன்-கரைச்சி பிரதேசசெயலர் பிரிவு
வ.நகுலேஸ்வரன்-கரைச்சி பிரதேசசெயலர் பிரிவு
தி.சிவமாறன்-கரைச்சி பிரதேசசெயலர் பிரிவு
விஜயசிங்கம் நிதர்சினி-பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவு
க.பிரபாமணி-கரைச்சி பிரதேசசெயலாளர் பிரிவு
அ.ஜயம்பிள்ளை-பூநகரி பிரதேசசெயலர் பிரிவு
வ.பாஸ்கரன்-பூநகரி பிரதேச செயலர் பிரிவு
சி.கதிர்மகன் -அக்கராயன் 
மற்றும் பொ.கிருபாகரன், பெ.குமாரசிங்கம், ஜெ.சிவகௌரி, நடராசா வனிதா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.
இங்கு கலந்துகொண்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவரான பேராசிரியர் சிற்றம்பலம் உரையாற்றும்போது,
போர் நடைபெற்ற காலத்தில் மண்ணோடு மண்ணாக போராடியவர்கள் நீங்கள். அடிப்படை வசதிpகள் இன்றி அனைத்தும் இழந்து சளைக்காது வாழ்ந்த வீரவுணர்வுள்ளவர்கள் நீங்கள். அகதி வாழ்வை தொடர்ந்து எதிர்கொண்டு வாழ்ந்தவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் நாங்கள் ஒருமித்த உணர்வுள்ளவர்கள்.
இங்க வந்துள்ள பெண்களின் வார்த்தைகளையும் அதில் பொதிந்திருக்கும் அர்த்தங்களையும் சிந்தித்து பார்க்கின்றபோது தமிழரசுக்கட்சியின் மகளிர் தலைவியாக இருந்த மங்கையர்கரசியாரை நினைவு வருகின்றது.
அக்காலத்துக்கு நிகரானது இது. இன்று கட்சிக்குள் ஜனநாயக பண்புகள் அருகிவருகின்றன. ஆனால் முன்பிருந்த எமது மூத்த தலைவர்களான தந்தை செல்வா அமிர்தலிங்கம் போன்றவர்கள் கட்சிக்குள் சிறந்த ஜனநாயக பண்புகளை பேணியிருந்தனர்.
தந்தை செல்வா மற்றவர்களின் கருத்துக்களை மிகவும் கேட்டு முடிவெடுக்கக் கூடியவர். அதனால் தான் இன்று அந்த அடித்தளம் இன்று வரை இந்த கட்சியை கட்டிக்காக்கின்றது.
தந்தை செல்வா ஒருபோதும் தன்னால் தான் எதுவும் முடியுமென்று சொல்லவில்லை. அவர் அன்று சொன்னார் எமக்கு பிறகு எம்மைவிட திறமையானவர்கள் வருவார்கள் அவர்களின் கையில் இந்த இலட்சியத்தை கையளிக்கவேண்டும்.
உங்களுக்குத் தெரியும் அந்த இலட்சியம் எப்படி கையளிக்கப்பட்டது. அது முள்ளிவாய்க்கால் வரை சென்றதும் இன்று எமது உரிமை பிரச்சினை சர்வதேசமயப்பட்டிருப்பதும் அறிவீர்கள்.
இப்போது நாம் அவதானமாக இருக்க வேண்டும். எமது பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பிலும் கட்சி ஜனநாயக பண்புகளை பேணி கருத்தறிந்து இறுதி செய்யப்பட வேண்டும் எனவும் கூறினார்.

ad

ad