புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2014

அமெரிக்காவிற்கு எச்சரித்த தலிபான் போராளிகள்
news
அண்மையில் தலிபான்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இடம்பெற்ற கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக தலிபான்கள் வெளியிட்டுள்ள காணொளியில் மீண்டும் ஆப்கானிஸ்தானிற்குள் வராதே எனும் ஆவேசமான வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
 
சுமார் ஐந்து வருடங்களாக பணயக் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த போவ் பேர்க்தால் என்ற குறித்த அதிகாரி கடந்த சனிக்கிழமை விடுவிக்கப்பட்டார்.அவரது விடுதலைக்காக அமெரிக்காவின் இரகசிய தடுப்பு முகாமான குவான்டனாமோவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து தாலிபான் போராளிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
 
இந்நிலையிலே இச்சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட காணொளியை  அவர்கள் வெளியிட்டுள்ளனர். இக்காணொளி வெளியானதை தொடர்ந்து  அரபு ஊடகங்களில் அமெரிக்கா தமக்கு அடிபணிந்துவிட்டதாகவும்  இக் கைதிகள் பரிமாற்றம் ஊடாக தாம் வைத்த நிபந்தனைகளை  அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏற்றுக்கொண்டு அடிபணிந்துள்ளதாகவும் தலிபான்கள்
விமர்சித்துள்ளார்கள்.
 

ad

ad