புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2014




பெரும் விடுதலைப் போராட்டத் துக்குக் கிடைத்த வெற்றியைப் போல, தனி மாநில உருவாக்கத்தைக் கொண்டாடு கிறார்கள், தெலுங்கானா மக்கள்! 

புதிய மாநிலத்தின் முதல் முதலமைச்சர் ஆகியிருக்கிறார், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் கல்வகுண்டல சந்திரசேகர் ராவ். 

திட்டமிட்டபடி ஜூன் 2ஆம் தேதியன்று நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், சந்திரசேகர் உள்பட 11 அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார், ஆந்திரம், தெலுங்கானா இரண்டுக்குமான பொது ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம் மன். ஹைதராபாத் ஆளுநர் மாளிகையில் திட்டமிட்டபடி காலை 8.15 மணிக்கு அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி, ரொம்பவும் எளிமையாக நடந்து முடிந்தது. 

ஆனால், தனி தெலுங்கானாவின் தோற்றத்தையொட்டி, புதிய மாநிலம் முழுவதும் எங்கு பார்த்தாலும் கோலாகலக் கொண்டாட்டமாக இருந்தது. 


புதுமாநிலத் தோற்றத்துக்கு முந் தைய நாளான ஜூன் முதல் தேதி இரவிலேயே, 150 ஊர்களில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. குறிப்பாக, ஐதராபாத் நகரில் தூள்பரத்தினார்கள், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர். தெலுங்கானா உருவாக்கம் தங்கள் கட்சியின் சாதனை என்பதை எல்லாருக்கும் அழுத்தமாகப் பதிவுசெய்வதற்காக, பெரும் செலவில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். மற்ற மாவட்டங்களில் இருந்து ஐதராபாத்தில் குவிந்த தெ.ரா.சமிதி கட்சியினர், தங்கள் கட்சியின் வெளிர் சிவப்பு நிறக் கொடிகளாலும் பதாகைகளாலும் நகரையே வெளிர் சிவப்புமயமாக ஆக்கி இருந்தனர். 

நகரின் மையப் பகுதியான உசேன்சாகர் ஏரியைச் சுற்றிலும், வாணவேடிக்கைகளும் கலை நிகழ்ச்சிகளும் தெலுங்கானாவின் சாதாரண குடி மக்களையும் கொண்டாட்டத்தில் ஈர்த்துக் கொண்டன. 

ஜூன் 1ஆம் தேதியன்று இரவு முடிந்து 2ஆம் தேதி முதல் நிமிடத்தில் கடிகார முட்கள் நின்ற நேரத்தில், தெலுங்கானா முழுவதும் ஒலித்தது, ’ஜெய ஜெயகே தெலுங்கானா’ கீதம். தெலுங்கு தேசிய இனத்தின் பிரபல கவிஞர் அந்தேசிறீ எழுதிய இந்தப் பாடலானது, அந்த அளவுக்கு தெலுங்கானாவின் அனைத்து தரப்பினரையும் கட்டிப்போட்டுவிடும். 

நாடு விடுதலை அடைந்ததைப் போன்ற விடுதலை உணர்வு தெறிக்க, தெலுங்கானாவில் பெரும் உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆந்திரத்தில் இருந்து மட்டுமல்ல, வெளிமாநிலங் களில் இருந்தும் வந்திருந்த புகைப்படக் கலைஞர் களுக்குச் சொல்லவா வேண்டும்; கரையில்லாத கொண்டாட்டக் காட்சிகளை ஓடியோடி சுட்டுக் கொண்டே இருந்தார்கள், உற்சாகக் காட்சிகளை!  

ஐதராபாத் நிஜாம் ஆட்சியின் கீழ் 500 ஆண்டு களுக்கும் மேலாக அடிமைப்பட்டுக் கிடந்த தெலுங்கானா, 1947க்குப் பின்னர், இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது. நிஜாமின் ஆட்சியில் இருந்த ஐதராபாத் (மராத்தி, கன்னடப் பகுதிகள் நீங்கலாக) இன்றைய தெலுங்கானா மக்களின் சமூக, பொருளா தார நிலைமையானது, பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த ராயலசீமா, கடலோர ஆந்திரப் பகுதி யினரைவிட மோசமாகவே இருந்தது. தங்கள் மேம்பாட்டுக்காக, தனி மாநிலம் வேண்டுமென்ற கோரிக்கையை, அந்த மக்கள் 1953-ல் அமைக்கப்பட்ட மாநில மறுசீரமைப்பு கமிசனிடம் வைத்தார்கள். அதன்படி, அந்த கமிசனும், ஐதராபாத் சட்டமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தால் மட்டும் ஆந்திரத்துடன் இணைக்கலாம் என உறுதிமொழி அளித்தது. தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பகுதி தலைவர்களுக்கு இடையில் ஜென்டில்மேன் உடன்பாட்டில், ’’முதலமைச்சர் ஆந்திரம் என்றால், துணை முதலமைச்சர் தெலுங்கானாக் காரர்; அமைச்சரவையில் ஆந்திரத்துக்கு 60%, தெலுங் கானாவுக்கு 40% வேண்டும்’’ என்பன போன்ற பல உறுதிமொழிகள் தரப்பட்டன. ஆனால், அதில் எதை யுமே பொருட்படுத்தாமல், 1956-ல் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டது. 

இதற்கிடையில், நிஜாம் ஆட்சியிலிருந்து தப் பித்து ஜனநாயக இந்தியாவில் தெலுங்கானா மக்களுக்கு விடிவு பிறக்கும் என நம்பியவர்கள், வெறுத்துப் போனார் கள். நீறுபூத்த நெருப்பாக இருந்த தெலுங்கானா உணர்வுத்தீ, 1952-ல் பற்றி எரியத் தொடங்கியது. ஐதராபாத்(தெலுங்கானா) பகுதியில் 1952-ல் ஆயிரக் கணக்கில் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களில், அந்தப் பகுதியினருக்கு வாய்ப்பு தரக்கோரி பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. ""முல்கி (உள்ளூர்) அல்லாதோரே வெளியேறுங்கள்; இட்லி சாம்பாரே வெளியேறுங்கள்''’எனும் அந்தப் போராட்டத்தின் முழக்கம், தெலுங்கானாவைப் பற்றிப் படரவைத்தது. அது சொற்ப காலத்துக்கும் மேல் நீடிக்கவில்லை. 

மீண்டும் 1969-ல் 369 பேரின் உயிரை வாங்கிய தெலுங்கானா போராட்டம், 72-லும் தொடர்ந்தது. 2009-ல் உக்கிரமானது. அந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதியன்று, தெலுங்கானாவை உருவாக்க மைய அரசு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டது. அதை எதிர்த்து கடலோர ஆந்திர, ராயலசீமா பகுதிகளில் போராட்டங்கள் வெடிக்கவே, இரண்டு வாரங் களுக்குள் அந்த முடிவை நிறுத்திவைப்பதாக மைய அரசு அறிவித்தது. அரசியல் கணக்கு வழக்குகளின் பின்னணியில், 2013-ல் தெலுங்கானா கோரிக்கைக்கு உயிர்கொடுத்த மைய காங்கிரஸ் அரசு, கடந்த பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டத்தையும் கொண்டுவந்து நிறைவேற்றியது. 

தெலுங்கானா மக்களின் கொண்டாட் டத்தின் பின்னே, ஆயிரக்கணக்கானவர்களின் உயிர்த் தியாக மும் கலந்தது என்பதால், அது மக்களின் பெருவிழா வாக அமைந்துவிட்டதில் ஆச்சர்யம் இல்லை. 

ad

ad