புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூன், 2014




திருச்சி துணை மேயர் ராஜினாமா
 .காதலியை கற்பமாக்கி ஏமாற்றினாரா

திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரிதுறைரோடு பகுதியைச் சேர்ந்தவர் மதுமதி. இவரது மகள் துர்கா என்கிற துர்கேஷ்வரி (வயது 28). இவர்கள் திருச்சி போலீஸ் கமிஷனர் கைலேஷ் குமார் யாதவ்விடம் சென்று
புகார் கொடுத்தனர். புகாரில், தனது கர்பத்திற்கு காரணம் திருச்சி துணை மேயர் ஆசிக் மீரான். கருவை கலைக்க சொல்லி மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். துர்காவின் புகார் மனுவை பெறாமல் போலீசார் அலைக்கழித்துள்ளனர். முதல் அமைச்சர் தனி பிரிவுக்கும் துர்கா சார்பில் மனு அனுப்பப்பட்டது.

இதற்கிடையில் கடந்த 04.05.2014 அன்று துர்காவுக்கு பெண் குழந்தை பிறந்தது. என்னை மனைவியாக்குவதாக கூறி, குழந்தையை கொடுத்த துணை மேயர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 14ஆம் தேதி பொன்மலை மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். 
மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயசுதா, புகாரை வாங்க மறுத்து குடும்ப நல ஆலோசனை நீதிமன்றத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளார். வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அதுவரை கைக்குழந்தையுடன் காவல் நிலையத்திலேயேதான் இருப்பேன் என்று துர்கா தர்ணாவில் ஈடுபட்டார்.
இந்த விஷயம் அறிந்த பொன்மலை உதவி கமிஷனர் ராஜேந்திôரன், திங்கள்கிழமை வரை பொறுத்திருக்குமாறும், செவ்வாய்க்கிழமை வழக்கை பதிவு செய்வதாகவும் கூறி, துர்கா அனுப்பி வைத்துள்ளார்.
இந்தநிலையில் துணை மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஆசிக் மீரான். 
கட்சி மேலிடத்தின் உத்தரவு படியே ஆசிக் மீரான் துணை மேயர் பதவியை ராஜினாமா செய்தாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். 
மறைந்த அதிமுக அமைச்சர் மரியம் பிச்சையின் மகன் ஆசிக் மீரான். துர்காவும், ஆசிக் மீரானும் சிறு வயதில் இருந்தே காதலித்து வந்தது மரியம் பிச்சைக்கு தெரியவந்தது. இதையடுத்து தங்கை மகளை கடந்த 28.05.2007ல் சென்னை வானகரத்தில் ஜெயலலிதா தலைமையில் ஆசிக் மீரானுக்கு திருமணம் செய்து வைத்தார் மரியம் பிச்சை.

ad

ad