புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2014

ஜெயலலிதா எடுக்கும் விஸ்வரூபம் .மத்தியை ஒரு கலக்கு கலக்குவாரா ? கூட்டணி அமைத்து  எதிர்கட்சியாகும் நோக்கம் காங்கிரசை ஓரம் கட்டுகிறார் 
காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நாடாளுமன்றத்தில் முயற்சிகள் எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது.
காங்கிரசுக்கு 44 எம்.பி.க் களே உள்ளதால் அந்த கட்சிக்கு எத்தகைய அந்தஸ்தை வழங்குவது என்று பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.
இது தொடர்பான முடிவை இன்னும் ஓரிரு தினங்களில் நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எடுத்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரசை எதிர்க்கட்சி அந்தஸ்திற்கு கொண்டு வர மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது என்ற முயற்சியை மேற்கொண்டனர்.
ஆனால் காங்கிரசை எதிர்க்கட்சியாய் ஏற்றுக்கொள்ள முடியாது என திட்டவட்டமாய் நாடாளுமன்ற விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதாவின் அ.தி.மு.க., மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றன.
அந்த பேச்சுவார்த்தைகளில் சுமூக நிலை ஏற்பட்டால் அ.தி.மு.க. தலைமையிலான புதிய கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ad

ad