புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூன், 2014

சர்வதேச விசாரணை கானல் நீர் அல்ல ; பாஸ்கரா 
சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்பது ஒரு கானல் நீர் என இந்த அரசு கூறிக்கொண்டிருப்பது அது அவர்கள் காணும் பகல் கனவு என ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் பாஸ்கரா  தெரிவித்தார். 

வளலாய் மக்களை அவர்களது சொந்த நிலங்களில் மீளக்குடியேற்றுமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில் :-
 
தமிழ் மக்களுக்கு ஒரு சுபீட்சமான வாழ்வை ஏற்படுத்தி கொடுப்பதாக கூறி அந்த கூற்றின் மூலம் உலகை ஏமாத்தி கொண்டு மூன்று தசாப்தகால அகிம்சை மற்றும் ஆயுத போராட்டத்தை விரும்பியோ, விரும்பாமலோ இந்த அரசு நடத்தி முடித்துள்ளது. 
 
இந்த போராட்டங்கள் முடிவடைத்து 5 வருடங்கள் கடந்துள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளிற்கு பின் தமிழ் மக்களிற்கு நல்ல சுபீட்சமான வாழ்வை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவே இந்த போராட்டத்தை நடாத்தியதாக இந்த அரசு கூறியுள்ளது. 
 
எனினும் இது தமிழ் மக்களிற்கான போராட்டம் அல்ல இனியும் அவர்களை அடிபணிய வைக்க கூடாது அவர்களிற்கு உரித்தான சுயாட்சியை அல்லது அவர்கள் வாழ்வாதாரத்தை நியாயப்படுத்த வேண்டுமென சர்வதேச சமுகம் கேட்டிருந்தது.
 
இந்த நிலையில் சர்வதேச சமூகத்திடம் இருந்து தப்புவதற்காக தன்னாலான நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை உருவாக்கியது அதில் குறிப்பிடப்பட்டுள்ள பல பரிந்துரைகளில் மீள் குடியேற்றம் என்பது மிக முக்கியமான ஒன்றாக இருந்தது.
 
ஆனால் தன்னால் உருவாக்கப்பட்ட நல்லினக்க ஆணைக்குழு சொல்வதைக்கூட நிறைவேற்ற முடியாது காலத்தை கடத்தி கொண்டிருந்த இந்த வேளையில் தான் சர்வதேச விசாரணை வந்துள்ளது.
 
இந்த நிலையில் திடிரென அறிவிக்கப்பட்ட இந்த சர்வதேச விசாரணையை கானல் நீர் போன்றது என கூறிக்கொண்டிருக்கும் அரசின் கற்பனை அரசுக்குத்தான் கானல் நீர் போன்றது இது அவர்கள் காணும் பகல் கனவு என்றார். 
 
தமிழ் மக்களிற்கு சுபீட்சத்தை ஏற்படுத்தி கொடுப்பதாக கூறி முழு  உலகையும் ஏமாற்றி இந்த போராட்டத்தை நடாத்தி முடித்த அரசு 25  வருடங்களாக வளலாய் மக்களை மீள் குடி ஏற்றாமல் 
அகதி வாழ்வு வாழவைத்துள்ளது.
 
அரசு சிந்திக்க வேண்டும் தான் இந்த குற்றவியல் விசாரணையில் இருந்து எப்படி தப்பப்போறேன் என்று இங்கு 25 வருடங்களாக சொந்த இடங்களை விட்டு எமது மாக்கள் வீதியில் நிக்கின்றார்கள். 
 
ஆனால் நேற்றும் விமல் வீரவம்ச இங்கு வந்து சிங்கள் குடியேற்றங்களை நடாத்திவிட்டு சென்றுள்ளார்.  அவர் தனக்கும் மனக்கசப்புள்ளதாள் அமைச்சரவை கூட்டத்தொடரில் பங்குபற்றுவதில்லை என ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.
 
ஆனால் இந்த விடையங்களில் எந்த அரசு ஆட்சி செய்தாலும் எந்த அமைச்சராக இருந்தாலும் எல்லா ஆட்சிக்கும் ஒற்றுமை இருக்கின்றது தமிழர்களை ஒடுக்கித்தான் வாழவேண்டுமென்று.
 
இந்த வாழ்வாதார அரசியல் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வும், மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஒரு உச்சகட்ட தீர்வை முன்வைத்தால் தான் சர்வதேச விசாரணைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
 
இல்லையேல் அரசு கூறிக்கொண்டிருக்கு இந்த சர்வதேச விசாரணை என்பது ஒரு கானல் நீர் என்று ஒருபோதும் அது கானல் நீர் அல்ல அது அரசு காணும் பகல் கனவு. நிச்சியமாக அரசு சர்வதேச விசாரணைகளிற்கு முகம் கொடுத்துதான் ஆகவேண்டும் என்றார்.  

ad

ad