புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2014

நாடு கடத்தப்பட்ட தமிழ் அகதிகள் மீது சித்திரவதை: விசாரணை நடத்தப்படும் என்கிறது பிரித்தானியா
விடுதலைப்புலிகளின் பெண் போராளிகள் தொடர்பில் பேசவுள்ளதாக குறிப்பிட்டார்.
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர்கள் சித்திரவதை மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் விசாரணை செய்யவுள்ளது.
பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
லண்டனில் நேற்று ஆரம்பமான வன்முறையின் போது பாலியல் வன்புணர்ச்சியை தடுக்கும் பிரகடனத்துக்கான மாநாட்டின் ஆரம்ப நாளில் அகதிகள் சட்டத்தரணிகள் மற்றும் குழுக்கள் முன்வைத்த முறைப்பாட்டின் பின்னரே ஹேக் தமது தகவலை வெளியிட்டார்.
அண்மைய வாரங்களில் நாடு கடத்தப்பட்ட தமிழ் அகதிகளும் இவ்வாறான சித்திரவதைகளுக்கு உட்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினார்கள்.
இதற்கு பதில் வழங்கிய வில்லியம் ஹேக்,
அகதிகள் விடயத்தை பிரித்தானிய உள்துறை அமைச்சே கையாளுகிறது என்று குறிப்பிட்டார். எனவே அந்த அமைச்சு இந்த விடயத்தில் விசாரணை நடத்துவதாக உறுதியளித்துள்ளதாக ஹேக் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவை பொறுத்தவரை அது அடைக்கலம் கோருவோருக்கு திறந்த நாடு எனினும் ஒழுங்குகள் உரிய முறையில் பேணப்படும். எவராவது இந்த ஒழுங்குகள் பேணப்படவில்லை என்று உணர்ந்தால், அது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று ஹேக் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை நேற்றைய ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான பிரதிநிதி அஞ்சலினா ஜொய்லி, மாநாட்டில் பிரித்தானியாவில் உள்ள விடுதலைப்புலிகளின் பெண் போராளிகள் தொடர்பில் பேசவுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்தநிலையில் அவர்களுக்கு ஏற்பட்ட பாலியல் மற்றும் துஸ்பிரயோக வன்முறைகள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் அன்டனியே கட்டரஸ் நாளை வியாழக்கிழமை மாநாட்டுக்கு வரும் போது கவனத்துக்கு கொண்டு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேநேரம் இலங்கையில் பொலிஸும் இராணுவமும் சித்திரவதைகளை ஒரே மாதியாக செயற்படுத்தி வருவதாக சித்திரவதை தொடர்பான கொள்கை வகுப்பாளர் பேனியட் லௌவிஒக்ஸ் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் குடிவரவு தொடர்பான சட்டத்தரணியாக செயற்படும் குலசேகரம் கீதாத்தனன் தமது உரையில், பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படும் தமிழ் அகதிகள் இலங்கையில் பாரிய சித்திரவதைகளுக்கு உள்ளாகின்றனர்.
எனினும் பிரித்தானிய தொடர்ந்தும் தமிழர்களை நாடு கடத்துவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
இந்தநிலையில் அவர்களுக்கு ஏற்பட்ட பாலியல் மற்றும் துஸ்பிரயோக வன்முறைகள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் அன்டனியே கட்

ad

ad