புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2014

அளுத்கமவில் ஊடரங்கு நேரத்தில் துப்பாக்கி சூடு ; மூவர் சாவு   ( இர

ண்டாம் இணைப்பு)
 
அளுத்கமவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், வல்பிட்டிய பள்ளிவாசலுக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
பலர் காயமுற்ற நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் தவித்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
 
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவை தொடர்பு கொண்டு கேட்டபோது, இன்னமும் தங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தனர்.
 
(முதலாம் இணைப்பு )
 
பேருவளை மற்றும் அளுத்கம பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரும் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.   பொதுபல சேனா அமைப்பினரால்  தர்ஹா நகரில் நடத்தப்படுகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலையடுத்து நேற்று மாலை முதல்  அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 
 
 
 
களுத்துறை மாவட்டம் அளுத்கம பிரதேசத்தில் கடும்போக்கு சிங்கள இளைஞர்களுக்கும், அப்பகுதியின் முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் நேற்று மாலை வன்முறைகள் வெடித்தன. இதனால் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதோடு. பலர் தாக்கப்பட்டனர்.
 
 
கோதாபிட்டிய, மீரிபென்ன, அட்ஹிகரகொட பகுதிகளில் முஸ்லிம்களின் வீடுகளும் தீயிட்டு எரிக்கப்பட்டதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த வன்முறைகளை அடுத்து அப்பகுதிக்கு சென்ற விசேட அதிரடிப்படை பொலிஸாரால் அளுத்கம, பேருவளை பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ad

ad