புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2014

உலகில் அதிக சத்தம் போடும் நகரம் மும்பை 
 உலகில் அதிக இரைச்சலான நகரம் மும்பை என்ற அதிர்ச்சி தகவல் மராட்டிய பொருளாதார கணக்கெடுப்பு அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்ததுள்ளது.

 
இரைச்சலான நகரம் பரபரப்பான சாலைகள் பல இலட்சக்கணக்கான வாகனங்கள் காதை பிளக்கும் 
ஹார;ன் ஒலி இது தவிர வான் உயர கட்டிடங்கள் கட்டும் பணி என எப்போதும் மும்பை நகரம் ஏதாவது
 ஒரு இரைச்சல் சத்தத்தை எழுப்பி கொண்டே தான் இருக்கும்.
 
மராட்டிய பொருளாதார கணக்கெடுப்பு அமைப்பு நடத்திய ஆய்வில் ஏற்கனவே குடிநீர் காற்று 
மாசுபடுதலால் அபாயகரமாக உள்ள மும்பை நகருக்கு பேரிடியாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.அது என்னவென்றால் உலகில் மிக 'இரைச்சலான நகரம்' என்ற பெயரும் மும்பை நகருக்கு கிடைத்து உள்ளது.
 
இதற்கு காரணம் நாள் ஒன்றுக்கு மும்பையில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் பவனி வருகின்றன. இதில் சுமார் 5 லட்சத்துக்கு மேற்பட்டவை வாடகை கார்களும் ஆட்டோக்களும் ஆகும்.
 
மேலும் இது தவிர கட்டிடங்களை கட்டுவதாலும் மற்றும் இடிக்கும் போது பயன்படுத்தும் உயர் அழுத்த
இயந்திரங்களால் அதிக இரைச்சல் உருவாகிறது. மேற்கண்ட காரணங்களால் தான் உலகில் மிக இரைச்சலான நகரம் என்ற பெயர் மும்பைக்கு கிடைத்துள்ளது.

ad

ad