புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2014



மாநிலங்களவை இடைத் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் திங்கள்கிழமையுட
  அதிமுக வேட்பாளர் நவநீதிகிருஷ்ணனைத் தவிர, பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் மனுதாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
   மாநிலங்களவை திமுக வேட்பாளராக இருந்த டி.எம்.செல்வகணபதி, தகுதி இழப்புக்கு உள்ளானதால் அவர் தனது எம்.பி.
பதவியை ராஜிநாமா செய்தார். இதனால் தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை இடம் காலியானது. இந்த இடத்துக்கான இடைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு கடந்த 12 ஆம் தேதி வெளியானது.
    வேட்புமனுதாக்கல் கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே அதிமுக வேட்பாளர் நவநீதகிருஷ்ணன் தனது மனுவை தாக்கல் செய்தார். அனைத்துத் தேர்தலிகளிலும் மனுதாக்கல் செய்யும் கே.பத்மராஜன், பி.என்.ஸ்ரீராமசந்திரன், எம்.மன்மதன் மற்றும் டி.என்.வேல்முருகன் ஆகியோர் சுயேச்சை வேட்பாளர்களாக மனுதாக்கல் செய்துள்ளனர். அவர்களில் டி.என்.வேல்முருகன் மட்டும் மனுதாக்கலுக்கு கடைசி நாளான திங்கள்கிழமை மனு செய்தார்.
     அதிகாரப்பூர்வ அறிவிப்பு: மாநிலங்களவை இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பி மனுதாக்கல் செய்த வேட்பாளர்களின் மனுக்கள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. சட்டப் பேரவைச் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஏ.எம்.பி.ஜமாலுதீன் மனுக்களை ஆய்வு செய்யவுள்ளார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், தேர்தல் பார்வையாளருமான பிரவீண்குமார் முன்னிலையில் இந்த ஆய்வு நடைபெறுகிறது.
    சுயேச்சை வேட்பாளர்கள் நான்கு பேருக்கும் போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை என்பதால் அவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. ஆளும்கட்சியான அதிமுக சார்பில் போட்டியிட மனு செய்துள்ள நவநீதகிருஷ்ணனுக்கு போதிய எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.
    பிரதான கட்சி சார்பில் அவர் மட்டுமே போட்டியிட மனு செய்துள்ளதால் இடைத் தேர்தலில் வாக்குப் பதிவு நடத்த வேண்டிய அவசியம் இருக்காது. வேட்புமனுக்களை திரும்பப் பெற வரும் புதன்கிழமை கடைசி நாளாகும். அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் அதிமுக வேட்பாளர் நவநீதகிருஷ்ணன், போட்டியின்றி தேர்வு செய்யப்படது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். மேலும், அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழும் அன்றைய தினமே அளிக்கப்படும்.
     தகுதி இழப்புக்கு உள்ளான செல்வகணபதியின் எஞ்சிய பதவிக் காலத்தில் மட்டுமே நவநீதகிருஷ்ணன் எம்.பி.யாகத் தொடர்வார். அதன்படி, 2016 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி வரை அவர் எம்.பி.யாக இருப்பார். செல்வகணபதி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    அதிமுக எம்.பி.க்கள் எண்ணிக்கை: நவநீதிகிருஷ்ணனின் தேர்வு மூலம், மாநிலங்களவையில் அதிமுகவுக்கு மேலும் ஒரு எம்.பி. கூடுதலாகியுள்ளது. ஏற்கெனவே அந்தக் கட்சிக்கு 10 எம்.பி.க்கள் உள்ளனர். இப்போது, அந்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது

ad

ad