புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2014

இலங்கைக்கு அன்பளிப்பாக ரோந்து படகை வழங்கியது அவுஸ்திரேலியா 
அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் மேலுமொரு ரோந்து படகு இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
 
இலங்கையின் சார்பில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயனாத் கொலம்பகேயும் அவுஸ்திரேலியா சார்பில் இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகர் ரொபின் மூடியும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சத்திட்டனர்.
 
கொழும்பிலுள்ள கடற்படை தலைமையகத்தில் நேற்று முந்தினம் நடைபெற்ற இந்த நிகழ்வில் கடற்படையின் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் நெயில் ரொசெய்ரோ, கடற்படையின் திட்ட மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் கொமொடோர் சமந்த விமலதுங்க, அவுஸ்திரேலியாவின் சுங்கம் மற்றும் கரையோர பாதுகாப்பு சேவை பிரிவைச் சேர்ந்த சூஈ நைட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
இலங்கை கடற்படையின் கடல் ரோந்து நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் இரண்டு ரோந்து படகுகளை அன்பளிப்பு செய்வதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் வாக்குறுதியளித்தார்.
 
இதன்படி குறித்த படகுகளில் முதலாவது ரோந்த படகு அவுஸ்திரேலியாவில் வைத்து இவ்வருடம் ஏப்ரல் மாதம் அன்பளிப்பாக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதை அடுத்து ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி முதலாவது படகு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இதற்கு பி – 350 என பெயரிடப்பட்டது.இந்த கப்பல் விசாலமான இந்து சமுத்திரத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

ad

ad