புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2014

எங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்; விவசாய அமைச்சர் கோரிக்கை 
எங்கள் தவறுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டுங்கள் என  வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் மக்களிடம் வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் என்றும் இல்லாதவாறு சுற்றுச்சூழல் தினம் அண்மையில் மண்டைதீவில் விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் கொண்டாடப்பட்டது. அதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

வடக்கு மாகாண சபையில் உள்ள நாங்கள் செய்வது அனைத்தையும் சரி என்று நினைத்து இருக்காது  தவறுகளை புத்திஜீவிகளும் மக்களும் உடனுக்குடன் எமக்கு சுட்டிக்காட்டும் போது வரலாற்று தவறுகளை இல்லாது செய்ய முடியும்.

நாம் வேலைப்பழு காரணமாகவோ அல்லது  தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் செய்ய வாய்ப்பு உள்ளது எனவே எங்களை வடக்கு மாகாண சபைக்கு கொண்டு வந்த மக்களே திருத்திக் கொள்ள வேண்டும்.

இதேவேளை, 1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளால் யாழ்.பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சுற்றுச்சூழல் தினத்திற்கு என்னையும் அழைத்திருந்தனர். அங்கு பல்கலைக்கழக பேராசிரியர்களைத் தவிர வெளியாட்கள் எவரும் சமுகம் தரவில்லை.

பொன்.சிவகுமாரனின் நினைவுதினம் அன்று ஆகும். அன்றைய தினம் பாடசாலை மாணவர்களால் தேசிய மாணவர் தினமாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இதனாலேயே அன்றைய நிகழ்வுக்கு மாணவர்கள் வருகை தராதமைக்கு காரணமாக இருந்தது.

எனவே குறித்த விடயம் தொடர்பில் கவனத்தில் கொள்ளுமாறு விடுதலைப்புலிகளின்  தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு கடிதம் ஒன்றினை எழுதி அன்று மாலை யாழ்.நகரில் உள்ள முறைப்பாட்டு பெட்டியில் போட்டிருந்தேன்.

இருப்பினும் விடயம் குறித்து பதில் ஏதும் வரவில்லை. எனினும் 1991ஆம் ஆண்டு யூன் 05ஆம் திகதியை சூழல் தினமாகவும் 06ஆம் திகதியை மாணவர் தினமாகவும் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக வேலுப்பிள்ளை பிரபாகரனால் அறிவிக்கப்பட்டது.

விடுதலைப்புலிகள் செய்வது எல்லாம் சரி என்று இருந்திருக்காது தவறுகளை சுட்டிக்காட்டியிருந்தால் இப்போது தவறு இழைத்து விட்டனர் என்று குற்றம் சாட்டியிருக்க தேவையில்லை.

இந்த தவறுகளை அன்று நாங்கள் செய்துவிட்டோம். எனவே வடக்கு மாகாண சபையில் முதன்முறையாக பொறுப்பு ஏற்றிருக்கும் நாங்களும் பல்வேறு தவறுகளை செய்ய வாய்ப்பு உண்டு எனவே அவற்றை உடனுக்குடன் சுட்டிக்காட்டுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad