புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூன், 2014

அகதிகளை மீளவும் இலங்கைக்கு திருப்பியனுப்புவது ஆபத்தானது:ஆஸி.மனித உரிமை ஆணைக்குழு 
இலங்கையில் இருந்து வரும் அகதிகளை திருப்பியனுப்பும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் செயற்பாடு ஆபத்தானவை என்று அவுஸ்திரேலியாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .


இலங்கைக்கு அனுப்பபட்டவர்கள் இன்னும் பாதுகாப்பு புலனாய்வு அதிகாரிகளால் அச்சுறுத்தப்படுவதாகவும் பணம் கேட்டு இரவு நேரங்களில் தனியாக அழைக்கப்பட்டு பயமுறுத்தியும் வருவதாகவும் தெரிவித்துள்ளது.

2012ம் ஆண்டு நாடு கடத்தப்பட்டவர்களின் வழக்குகள் இதுவரைக்கும் நிறைவு செய்யப்படவில்லை எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் நைன் செய்தி சேவை இதை வெளியிட்டுள்ளது. அதே நேரம் அகதிகளை தடுத்து வைக்கும் செயற்பாடுகளிலும் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையாளர் கில்லியம் ரைக்ஸ் கோரி உள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்குள் வரும் அகதிகள் உண்மையான அகதிகளா என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் சர்வதேச கடைப்பாட்டை கொண்டிருக்கின்றது .

எனவே குடிவரவு கொள்கையில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும். அவுஸ்திரேலியாவில் 6579 பேர் அரசியல் புகலிடம் கோரிய நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதில்1428 சிறுவர்களும் அடங்குவதாக செப்ரெம்பர் 5ம் திகதி எடுக்கப்பட்ட புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

ad

ad