வெள்ளி, ஜூலை 18, 2014


ஐ நா  இல் சாட்சியம் அளிக்க 10 பேர் ஜெனீவ சென்றனரா ?
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்குழு முன் சாட்சியமளிப்பதற்காக பத்து பேர் சுவிட்சர்லாந்திற்கு பயணமாகியுள்ளதாக, சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நவனீதம்பிள்ளையினால்
நிறுவப்பட்ட விசாரணைக்குழுவின் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகளில் சாட்சியமளிக்கும் நோக்கில் பத்து பேர் சுவிட்சர்லாந்து சென்றுள்ளனர். பிரிட்டன் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை ஆகியனவே இவ்வாறு பத்து பேரை அனுப்பி வைத்துள்ளன. சாட்சியமளிக்க முன்வந்தவர்கள் வன்னிப் போரின் போது இலங்கையில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஐ.நா விசாரணைக் குழு ஜெனிவாவில் ஐந்து நாட்கள் விசாரணை நடத்தவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்படுகிறது.