புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூலை, 2014

மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம் : யாழில் கையெழுத்து வேட்டை 
news
மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம் என தெரிவித்து சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.00 மணியளவில் யாழ். மத்திய பேரூந்து நிலையத்தில் கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.
 
இதன் போது ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட தமிழ் ,முஸ்லிம் , சிங்கள பொதுமக்கள் தமது கையொப்பங்களை பதிவு செய்து இனவாதத்திற்கும், மதவாதத்திற்குமான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
 
இந்த நிலையில் இனவாதத்திற்கும், மதவாதத்திற்கும் இல்லை என்போம் எனும் தொனிப்பொருளில் தமிழ், சிங்கள மொழிகளடங்கிய  துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டிருந்தது.
 
அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது :- 
 
எமது நாடு இனவாத - மதவாத தீயில் சிக்கிக் கொண்டிருக்கும் தருணத்தில் நாங்கள் உங்களை சந்திக்க வருகிறோம். 1983 ஜூலை மாதம் 23 ஆம் திகதி இன்றையதினம் 31  வருடங்களிற்கு  முன்னர் அன்றைய ஆட்சியாளர்களாலேயே நடந்த கறுப்பு ஜூலையின் பின்னர் உக்கிரமடைந்த யுத்தத்தினால் துன்பப்பட்டோம்.
 
 
 
பலர் அங்கவீனர்களாக்கப்பட்டனர், அனாதைகளாகினர், எல்லாவற்றையும் விட எமது சமூக மனச்சாட்சி, பகுத்தறிவு, மனிதநேயம் அனைத்தும் இழக்கப்பட்டது. அந்த பாரிய அழிவின் பின்னர் யுத்தம் முடிந்து விட்டது என ஆறுதலடையும் சமயத்தில் மீண்டும் இனவாத, மதவாத பொறியில் சிக்கவைக்க அழுத்கம, பேருவளபகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களை நாம் கண்டோம். இந்த பொறியை நிர்மாணித்தவர்கள் ஆட்சியாளர்களே மீண்டும் யுத்தத்திற்கு பாதை அமைக்கப்படுகின்றது. அந்த பாதையில் செல்வது எந்தளவு அழிவைத்தரும் என்பதை அனுபவ வாயிலாக கண்டோம். நாங்கள் அந்த வழியில் மீண்டும் சென்று பொறியில் சிக்க வேண்டுமா? என குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad