புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூலை, 2014

அல்ஜீரியா விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உட்பட 116 பேர் மரணம்
அல்ஜீரியாவில் இருந்து புறப்பட்ட ஏர் அல்ஜீரியாவின் ஏஎச்-5017 என்ற விமானம் நைஜரில் விழுந்து நொறுங்கியதில் விமானி உள்பட 116 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
110 பயணிகளும், 6 ஊழியர்களையும் உள்ளடக்கிய ஏர் அல்ஜீரியாவின் ஏஎச்-5017 என்ற விமானம் இன்று மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவின் தலைநகர் ஒகடாகோவில் இருந்து அல்ஜியர்ஸ் நோக்கிச் புறப்பட்டது.
விமானம் கிளம்பிய 50 நிமிடத்தில் ரேடாரில் இருந்து விமானம் மறைந்துவிட்டது. இதனை தொடர்ந்து அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரிகள், விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மாயமான விமானம் நைஜரில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த 116 பேரும் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் போர் நடைபெற்று வரும் உக்ரைனில் மலேசிய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து அதில் பயணம் செய்த 298 பேரும் இறந்தனர்.
இதேபோல் அதே நிறுவனத்தின் மற்றொரு விமானம் கடந்த மார்ச் மாதம் நடுவானில் மாயமானது. இதுவரை அது கண்டுபிடிக்கப்படாத நிலையில், தற்போது அல்ஜீரிய விமானம் விபத்துக்குள்ளானது மிகுந்த அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ad

ad