புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூலை, 2014

பிரான்சில் நடைபெற்ற விக்டர் ஒஸ்கார் நினைவுக்கான உதைபந்தாட்டப் போட்டி!(நன்றி -பதிவு )சுவிஸ் யங் ஸ்டார்  கிண்ணத்தை கைப்பற்றியது 





பிரான்சில் ஈழத்தமிழர் உதைபந்தாட்டச்சம்மேளன ஆதரவுடன், தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு 11 வது தடவையாக நடாத்திய லெப். கேணல்.
விக்ரர் ( ஒஸ்கா) நினைவு சுமந்த அனைத்துலக ரீதியிலான உதைபந்தாட்டம்.


பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான சார்சல் மாநரத்தில் அமைந்துள்ள நெல்சன் மண்டேலா மைதானத்தில் 27.07.2014 காலை 10.00 மணிக்கு தமிழ்ச்சோலை மாணவ மாணவியரின் முழவு வாத்திய இசையுடன் விருந்தினர்கள், கழகங்களின் பொறுப்பாளர்கள் அழைத்து வரப்பட்டு பொதுச்சுடர் ஏற்றலுடன் போட்டிகள் ஆரம்பமாகியது.


பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் உதவிப் பொறுப்பாளர் திரு. அலெக்ஸ் அவர்கள் ஏற்றி வைக்க பிரெஞ்சு தேசியக்கொடியினை சார்சல் தமிழ்ச்சங்கத்தலைவரும், பிரான்சு தமிழ்ச்சோலை தலைமைப்பணியக உதவி தலைவருமாகிய திரு.டக்லஸ் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடி தமிழர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு. சுதர்சன் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மாவீரர் லெப். கேணல் திருவுருவப்படத்திற்கும், மாவீரர் நினைவு சின்னப்படத்திற்கும் 19.09.1989ல் மாங்குளம் பகுதியில் இந்திய இராணுவத்துடனான நேரடி மோதலில் வீரமரணத்தை தழுவிய கப்டன் வண்ணன் அவர்களுடைய சகோதரி அவர்கள் ஏற்றி வைக்க, மலர் வணக்கத்தை 2006ல் மன்னார் பகுதியில் வீரமரணத்தைத் தழுவிக் கொண்ட மேஐர். வன்னியன் அவர்களின் சகோதரர் செய்திருந்தார்.


அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச்சம்மேளனத்தின் தலைவர் திரு.சங்கரராஜா அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து இப்போட்டிகளில் பங்கு பற்றிய கழகங்களின் கொடிகளும் ஏற்றி வைக்கப்பட்டது.
நடைபெற்ற இப்போட்டியில் பின் வரும் நாடுகளும் அதன் கழங்களும் பங்கு பற்றியிருந்தன.



தமிழர் விளையாட்டுக்கழகம் - மலேசியா
தாய்மண் விளையாட்டுக்கழகம் - சுவிஸ்
யங்ஸ்ரார் ( இளைய நட்சத்திரம் ) சுவிசு
தமிழர் விளையாட்டுக்கழகம் - நெதர்லாந்து
தமிழர் விளையாட்டுக்கழகம் - 93 – பிரான்சு
நல்லூர் ஸ்தான் விளையாட்டுக்கழம் - பிரான்சு
ஈழவர் விளையாட்டுக்கழகம்- பிரான்சு
பாசையூர் சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழகம்- பிரான்சு
குருநகர் பாடுமீன் விளையாட்டுக்கழகம்- பிரான்சு
உதயசூரியன் - விளையாட்டுக்கழகம் - பிரான்சு
சென்பற்றிக்ஸ் விளையாட்டுக்கழகம் - பிரான்சு
நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக்கழம் - பிரான்சு


ஆகிய கழங்கள் பங்கு பற்றி சிறப்பித்திருந்தன. காலை முதல் பிற்பகல் வரை கடும் வெயிலுக்கு மத்தியில் போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்றன. மாலை திடீரென அப்பகுதி முழுவதும் காற்றுடன் கலந்த கல்லு மழை பெய்திருந்தது. இதனால் ஒரு மணிநேரம் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன. அதன்பின்னர் தங்குதடையின்றி போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. ஆசிய நாட்டில் இருந்தும், ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் வந்து சிறப்பித்த அனைத்து வீரர்களும் தமிழர்கள் சிறந்த தமிழ் உதைபந்தாட்ட வீரர்கள் என்ற பெருமையையும் பெரிமிதத்தை கொள்வதோடு இது தமிழ் இனத்திற்கும் அவர்களின் விடுதலைக்கும் போராட்டத்திற்கும் பலம் சேர்க்கும் சேர்க்க வேண்டும்.


நடைபெற்ற போட்டியில்

மூன்றாம் இடத்தை: குருநகர் பாடுமீன் விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டது.
இவர்களுக்கான வெற்றிக்கிண்ணத்தையும், பதக்கங்களையும், 250 ஈரோக்கள் பணப்பரிசினை திரு. யக்கி அவர்களும், சார்சல் தமிழ்ச்சங்கத்தலைவர் திரு. டக்லஸ் அவர்களும் வழங்கி மதிப்பளித்தனர்.


இரண்டாம் இடத்தை: நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டது.
இவர்களுக்கான வெற்றிக்கிண்ணத்தையும், பதக்கத்தையும், 500 ஈரோக்கள் ( வி ரி காஸ் அன் கரி நன்கொடை) பணப்பரிசினையும், தமிழ்ச்சோலை தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திரு. nஐயக்குமரன் அவர்களும், தமிழர் உதைபந்தாட்ட மெய்வல்லுனர் போட்டி முகாமையாளர் திரு. இராஐலிங்கம் அவர்களும் வழங்கி மதிப்பளித்தன.


முதலாம் இடத்தை: யங்ஸ்ரார் விளையாட்டுக்கழகம் - சுவிஸ் பெற்றுக்கொண்டது.
இவர்களுக்கான வெற்றிக்கிண்ணத்தையும்,1000 ஈரோக்கள் பணப்பரிசினையும் திரு. சார்ல்ஸ் தேவசகாயம் அவர்கள் வழங்க வீரர்களுக்கான பதக்கங்களை தமிழர் விளையாட்டுத்துறை உதவிப்பொறுப்பாளர் திரு. மகேஸ் அவர்களும், ஈழத்தமிழர் உதைபந்தாட்டச்சம்மேளன தலைவர் திரு. சங்கரராஜா அவர்களும் வழங்கி மதிப்பளித்திருந்தனர்.


இப்போட்டியில் சிறந்த வீரர்களாக : இல 13. கஐPஸ் நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழம்) இவருக்கான மதிப்பளித்தலை நடுவர் சங்கச்செயலாளர் திரு. கேதீஸ்வரன் அவர்கள் செய்திருந்தார்.


இல: 05 ப.பிரதீப் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழகம் - சுவிஸ் ) இவருக்கான மதிப்பளித்தலை சம்மேளனத்தின் செயலாளர் திரு. நந்தகுமார் அவர்கள் செய்திருந்தார்.


இறுதி ஆட்டநாயகன் இல. 08 யங்ஸ்ரார் விளையாட்டுக்கழகம் - சுவிஸ் இவருக்கான மதிப்பளித்தலை ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் திரு. சங்கரராஐh அவர்கள் செய்திருந்தார்.


லெப்: கேணல். விக்ரர் ( ஒஸ்கா ) அவர்களின் நினைவு சுமந்த சுற்றுக்கிண்ணத்தை யங்ஸ்ரார் விளையாட்டுக்கழகம்- சுவிஸ் 2014ல் தனதாக்கிக் கொண்டது.

ad

ad