புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2014


இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள்: தமிழ் அகதிகள் பேரவை
அவுஸ்திரேலியாவினால் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களில் 11 பேர் இலங்கை
புலனாய்வுப் பிரிவினரினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.
153 தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் கடந்த வாரம் படகொன்று சென்றிருந்திருந்தமை தொடர்பில் தமிழ் சமூகத்தினரும் அகதி ஆதரவாளர்களும், ஊடகங்களும் அறிவித்திருந்தன.
படகில் சென்றவர்கள் பாதுகாப்புக்காக அவுஸ்திரேலியாவின் சுங்கக் கப்பலில் ஏற்றப்பட்டதாக கூறப்பட்டது. எனினும் அவர்கள் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
இந்த நிலையில், படகில் இருந்தவர்களின் உறவினர்கள் சார்பில் தான் பேசுவதாக தமிழ் அகதிகள் பேரவையின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு படகில் வந்தவர்களில் குறைந்தது 11 பேர் இலங்கை புலனாய்வாளர்களின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள்.
அவர்கள் 11 பேரும் உண்மையான புகலிட கோரிக்கையாளர்கள். இவர்களைப் போல் சம்பவங்களை எதிர்நோக்கிய பலர் அந்த படகில் இருந்திருக்கலாம்.
படகில் வந்தவர்களில் பலர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என குற்றம் சுமத்தப்பட்டு இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள்.
11 பேரின் 5 உறவினர்களும் அந்த படகில் இருந்துள்ளனர். இவர்களும் கடந்த காலங்களில் இலங்கை புலனாய்வாளர்களால் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள்.
படகில் விடுதலைப் புலிகள் இருந்தார்களா என்பது பற்றி தெளிவாக தெரியாது. ஆனால் அதில் இருந்தவர்களில் பலர் புலிகளின் உறுப்பினர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டவர்கள்.
இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதி முகாம்களில் இருந்த இவர்கள் படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கி வந்துள்ளனர்.
இவர்கள் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டால் நிச்சயம் அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும்.
கடந்த காலங்களில் சித்திரவதைகளை அனுபவித்து வந்த இவர்கள் இலங்கை புலனாய்வு படையினரால் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஆபத்து அதிகமாக உள்ளதுடன் அது குறித்து நாம் மிகவும் கவலை அடைந்துள்ளோம்.
இந்த அகதிகள் தொடர்பாக எமக்கு மேலும் தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களை இலங்கை அதிகாரிகள் சித்திரவதை செய்வார்கள் என்பதால், நாம் அவர்கள் பற்றி உன்னிப்பான கவனத்தை செலுத்து வருகின்றோம் எனவும் மயில்வாகனம் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad