புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூலை, 2014

 153 அகதிகள் இன்றிரவு இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்படலாம்!- அவுஸ்திரேலிய செய்தித்தாள் - நான்கு கேள்விகளை மட்டும் கேட்கும் அதிகாரிகள்
153 தமிழ் அகதிகளை கொண்ட படகு பெரும்பாலும் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக இலங்கையின் கடற்படை அதிகாரி ஒருவரை
கோடிட்;டு அவுஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. இன்று புதன்கிழமை இரவு இந்த அகதி பரிமாற்றம் நடுக்கடலில் வைத்து இடம்பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 

153 இலங்கை தமிழ் அகதிகளுடன் இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியா சென்ற படகை அவுஸ்திரேலியா இலங்கை கடற்படையினரிடம் கையளித்ததாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எனினும் இது தொடர்பில் அவுஸ்திரேலியா அரசாங்கம் உத்தியோகபூர்வ செய்தி எதனையும் வெளியிடவில்லை.
எனினும் 153 தமிழ் அகதிகள் படகும் 50 பேரைக் கொண்ட மற்றும் ஒரு படகும் இன்னும் கடலில் தரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் 153 தமிழ் அகதிகளை கொண்ட படகு பெரும்பாலும் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக இலங்கையின் கடற்படை அதிகாரி ஒருவரை கோடிட்டு அவுஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
இன்று புதன்கிழமை இரவில் இந்த அகதி பரிமாற்றம் நடுக்கடலில் வைத்து இடம்பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் 50 பேரைக் கொண்ட படகில் உள்ளவர்களை படகில் வைத்து தொலைத்தொடர்பு கருவிகளின் மூலம் அடையாளம் காணும் பணிகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை மனித உரிமைகள் சட்டத்தரணிகள் கண்டித்துள்ளனர். அவுஸ்திரேலியா சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதற்கிடையில் இதுவரை தமது கரையில் இருந்து அகதிகள் படகு அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு செல்லவில்லை என்று கூறிவந்த இந்திய அதிகாரிகள் தற்போது பாண்டிச்சேரி கரையில் இருந்து மீனவப்படகு ஒன்றில் அகதிகள் புறப்பட்டு சென்றமையை உறுதிப்படுத்தியுள்ளதாக அவுஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
நான்கு கேள்விகளை மட்டும் கேட்கும் அதிகாரிகள்

அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கும் இரண்டாவது அகதிப் படகிலுள்ள அகதிகளிடம், விசாரணை என்ற பெயரில் நான்கு கேள்விகள் மாத்திரமே அவஸ்திரேலிய அதிகாரிகளால் எழுப்பப்பட்டுள்ளன.
ஏற்கனவே 153 ஈழ அகதிகளுடனான படகு அநாதரவான அவுஸ்திரேலிய கடற்பரப்பில் நிற்கும் நிலையில், மேலும் 50 பேரை ஏற்றிய படகு ஒன்றும் அந்த பகுதியில் பயணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த படகை தொடர்பு கொண்டு அவுஸ்திரேலிய அதிகாரிகள், அவர்களின் பெயர், நாடு, எங்கு செல்கிறார்கள், எதற்காக அவர்களின் நாட்டில் இருந்து வெளியேறினார்கள் ஆகிய நான்கு கேள்விகளை மாத்திரமே கேட்டுள்ளனர்.
இதன் அடிப்படையிலேயே அவர்களை அகதிகளாக அங்கீகரிக்கவும், நாடு கடத்தவும் தீர்மானிக்கப்படுவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கையில் இருந்து செல்லும் அகதிகளாக இருந்தால் அவர்கள், நடுக்கடலில் வைத்தே நாடு கடத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. 

ad

ad