புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூலை, 2014


153 தமிழர்கள் எங்கே.?தமிழின அழிப்பில் பங்காளியாகும் அவுஸ்திரேலியா!
153 தமிழர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அண்மையாக படகில் எண்ணெய் கசிவேற்பட்ட நிiலையில் தத்தளித்துகொண்டிருந்த செய்தியை நாம் அறிவோம். இந்த நிiலையில் அவர்கள்
குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை.
அவுஸ்திரேலிய அரசு அவர்களின் நிலைகுறித்து பேச மறுக்கிறது. இந்த நிலையில் அவுஸ்திரேலிய கடற்படையினரால் மீட்கப்பட்ட தமிழர்கள் இனஅழிப்பு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக ஒரு செய்தி வருகிறது.
அவர்கள் கடலில் மூழ்கி விட்டார்களா? அல்லது இனஅழிப்பு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டார்களா? அதைக்கூட உறுதிப்படுத்த அவுஸ்திரேலியா மறுக்கிறது.
என்ன கொடுமை இது?
அண்மையில் காணாமல் போன மலேசிய விமானத்தை உலகமே தேடும் நிலையில் தாம் எந்த நேரமும் கடலில் மூழ்கலாம் என்று அலறியவர்களை கண்டும் காணாது இந்த உலகம் மவுனம் சாதிக்கிறது.
தமிழர்களுக்கு என்று ஒரு தனி நீதியை இந்த உலகம் கடைப்பிடிக்கிறதா?
அவுஸ்திரேலிய அரசு இனஅழிப்பிலிருந்து தப்பி செல்லும் தமிழர்களை விரட்டி பிடிப்பதற்காக அதிவேக படகுகளை இனஅழிப்பு அரசிற்கு தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்கிறது.
போதாததற்கு பொதுநலவாய மாநாட்டை சிறீலங்காவில் நடத்தக்கூடாது என்றும் அதை அவுஸ்திரேலியா புறக்கணிக்க வேண்டும் என்றும் உலக மனித உரிமை அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்தபோது அதை மறுத்ததுடன் இனஅழிப்பு அரசிற்கு ஆதரவாக ஒரு லொபியையும் அவுஸ்திரேலியா செய்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.
அத்தோடு அண்மையில் சிறீலங்காவிற்கு எதிராக ஜெனிவாவில் தீர்மானம் கொண்டுவரப்பட இருந்த வேளையில் அதற்கு எதிராகவும் அவுஸ்திரேலியா நடந்து கொண்டது.
இவை எல்லாவற்றினதும் உச்சமாக இனஅழிப்பிலிருந்து தப்பி நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த அப்பாவி தமிழர்களின் உயிர்களுடனும் விளையாடத்தொடங்கிவிட்டது அவுஸ்திரேலியா.
இதை நாம் எப்படி எடுத்துக் கொள்வது.?
தமிழர்கள் மட்டுமல்ல உலகில் மனிதநேயம் மிக்க அனைவரும் உடனடியாக அவுஸ்திரேலியாவிற்கு எதிராக அணிதிரள வேண்டும்.
உலகில் மனிதத்தையும் அறத்தையும் மதிக்கும் எவராலும் அவுஸ்திரேலியாவின் இந்த போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஈழம்ஈநியூஸ்

ad

ad