புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2014


153 இலங்கை அகதிகளும் கப்பலில் காற்றுப்புகாத அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்!- ஐ.நா அதிருப்தி

அவுஸ்திரேலிய கடற்படையிரால் இடைமறிக்கப்பட்ட படகில் இருந்த 153 இலங்கை அகதிகள், கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் உள்ள சுங்க கப்பல் ஒன்றில் பூட்டப்பட்ட கதவுகளுக்கு பின்னால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
இந்த கப்பலின் அறைகளில் காற்றுப்புகக்கூட ஜன்னல் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இவர்கள் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள், எங்கே கொண்டு செல்லப்படப் போகிறார்கள் போன்ற விடயங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் இன்னும் வெளியிடவில்லை என்று தெ மோனிங் ஹெரல்ட் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் அவுஸ்திரேலிய மேல்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஆவணம் ஒன்றை அடுத்து அகதிகள் தொடர்பில் முதல் செய்தி வெளியாகியுள்ளது.
இவர்கள் கடந்த ஜூன் 13 ஆம் திகதி இந்திய பாண்டிச்சேரி கரையில் இருந்து அவுஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்டனர்.
இதனையடுத்து கடந்த ஒரு வாரமாக இந்த அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தது.
இதன்போது அகதிகளுக்கு சுதந்திரமான நடமாட்டங்கள் இல்லை. அவர்கள் அறைகளில் இருந்து வெளியேறும்போது பாதுகாப்பு காவலர்கள் உடன் செல்கின்றனர் என்று அகதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தினர். அவர்களுடைய கையடக்க தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் அவர்கள் மீண்டும் இலங்கைக்கோ, நவுறு மற்றும் மானஸ் தீவுக்கோ கொண்டு செல்லப்படுவது சட்டவிரோதமானது என்று உத்தரவிட வேண்டும் என்று சட்டத்தரணிகள் மன்றில் கோரிக்கை விடுத்தனர்.
இந்த அகதிகளில் இருந்த ஆண்கள் தனியாக பிரிக்கப்பட்டு வேறு இடம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சட்ட ஆலோசனைகள் மறுக்கப்பட்டுள்ளன என்றும் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தினர்.
அவுஸ்திரேலிய கப்பலில் உள்ளவர்கள் அனைவரும் இலங்கை தமிழர்கள்! எனினும் பிள்ளைகள் இந்தியாவில் பிறந்தவர்கள்
அவுஸ்திரேலியாவில் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 153 இலங்கை தமிழ் அகதிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் அவுஸ்திரேலியா சர்வதேச நியமங்களை மீறுவதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் அவுஸ்திரேலியாவுக்கு தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
ஜூன் 29 ஆம் திகதி இடைமறிக்கப்பட்ட கப்பலின் அகதிகள் தற்போது கிறிஸ்மஸ் தீவில் இருந்து 29 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள நடுக்கடலில் சுங்க கப்பல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இவர்கள் தொடர்பில் வழக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்படவுள்ளது.
இதனையடுத்து ஓகஸ்ட் 5 ஆம் திகதி வழக்கு விசாரணை ஆரம்பமாகவுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் இலங்கை தமிழர்கள் என்று தெரியவந்துள்ளது.
எனினும் அவர்களின் பிள்ளைகள் இந்தியாவில் பிறந்தவர்களாவர் என்றும் மன்றில் தெரிவிக்கப்பட்டது.
- See more at: http://www.TAMILWIN.com/show-RUmsyHSaLcntz.html#sthash.i5OMtkxB.dpuf

ad

ad