புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூலை, 2014


மூன்று மணித்தியாலங்கள் மட்டுமே சூரிய ஒளியைப் பார்க்கும் தஞ்சக் கோரிக்கையாளர்கள
நடுக்கடலில் அவுஸ்திரேலிய சுங்கத் திணைக்களத்தின் கப்பல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் 153பேரும் கடுமையாக நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் அவுஸ்திரேலிய அதிகாரிகளினால் சர்வதேச எல்லைக்கு அப்பால் 25 கிலோ மீற்றர் சென்று நடுக் கடலில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் கடந்த ஜூன் மாதம் 29ம் திகதி முதல் இன்று வரை படகில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நாள் ஒன்றுக்கு மூன்று மணித்தியாலங்கள் மட்டுமே குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் சூரிய ஒளியை பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டடுள்ளது.
அவுஸ்திரேலிய அரசாங்கமும் இதனை அந்நாட்டு நீதிமன்றில் உறுதி செய்துள்ளது.
காலநிலை சீராக இருந்தால் உணவு வேளைகளின் போது மட்டும் சூரிய வெளிச்சத்தை பார்வையிட அனுமதிக்கப்படுவதாகவும் மற்றைய நேரங்களில் காற்று கூட போகாத யன்னல்கள் அற்ற அறைக்குள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறு குழந்தைகளும் புகலிடக் கோரிக்கையாளர் படகில் தங்கியிருப்பதனால் படகில் பூரண சுதந்திரம் வழங்குவது ஆபத்தானதாகும் எனவும், படகில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்களை கால வரையறையின்றி தடுத்து வைப்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை. அவர்கள் படகு மூலம் அவுஸ்திரேலியா வந்தமையினால் எமது சட்டங்களை தளர்த்த முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அவுஸ்திரேலியக் கடற்பரப்பிற்குள் வைத்து குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்படவில்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒத்துக்கொண்டுள்ளது.
நடுக்கடலில் அடைத்து வைத்துள்ள அகதிகளின் உயிர்களுக்கு சர்வதேசம் உதவிக்கரம் நீட்டுமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

ad

ad