புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூலை, 2014


ரயில் மோதி 17 குழந்தைகள் பலி: தலா ரூ.2 லட்சம் நிவாரண தொகை அறிவித்த சதானந்த கவுடா

தெலுங்கானா மாநிலத்தில் 38 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சென்ற தனியார் பேருந்து ஒன்று மேடக் மாவட்டம், மாசியாபேட் என்ற இடத்தில் உள்ள ஆளில்லா ரயில்வே பாதையை கடக்க முயன்றது. அப்போது அந்த பாதையில் வந்த ரயில் பள்ளி வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பள்ளி பேருந்து தூக்கி வீசப்பட்டது. இந்த கோர விபத்தில் 17 குழந்தைகள் உயிரிழந்தனர். பள்ளி பேருந்து ஓட்டுநரும் உயிரிழந்தார். 

இந்த விபத்து குறித்து மக்களவையில் பேசிய மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, இந்த சம்பவத்திற்கு ரயில்வே அமைச்சகம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்து துரதிர்டவசமானது என்றார்.

மேலும், உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூபாய் 2 லட்சம் அளிக்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாயும் அளிக்கப்படும் என்றார். 

இதற்கிடையே ரயில் தண்டவாளங்களை புதுப்பிக்க 19 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும், பாதுகாப்பான பயணமே ரயில்வேயின் முக்கிய நோக்கம் என்றும் கூறினார். 

உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை அளிக்கப்படும் என்றார். 

ad

ad