புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2014

பரிதாப நிலையில் இங்கிலாந்து: வரலாறு படைக்குமா இந்தியா? 
 இந்தியா 2வது இன்னிங்ஸில் 342 ஓட்டங்கள் குவித்து இங்கிலாந்துக்கு 319 ஓட்டங்கள் இலக்காக வைத்துள்ளது. 

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
 
இந்தியா முதல் இன்னிங்ஸில் 295 ஓட்டங்களும் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ஓட்டங்களும் குவித்தது.
 
24 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 342 ஓட்டங்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய முரளி விஜய் 95 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.
 
பின்னர் ஜோடி சேர்ந்த ஜடேஜா (68 ஓட்டங்கள்) புவனேஸ்குமார்(52 ஓட்டங்கள்) இந்திய அணியின் ஓட்டங்கள் உயர காரணமாக இருந்தனர். இதனால் இங்கிலாந்துக்கு 319 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
 
இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து நேற்றைய 4வது நாள் ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 105 ஓட்டங்கள் எடுத்து பரிதாப நிலையில் இருந்தது.
 
ஜோரூட் 14 ஓட்டங்களும் மொய்ன் அலி 15 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.
 
முன்னணி வீரர்களான அணித்தலைவர் கூக், ராப்சன் ,பேலன்ஸ் இயன்பெல் போன்றவர்கள் ஆட்டம் இழந்து உள்ளனர்.
 
இந்தியா சார்பில் இஷாந்த்சர்மா 2 விக்கெட்டும் முகமது ஷமி, ஜடேஜா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
 
இதே போல் இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தால் லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைக்கும்.
 
அதே சமயம் இங்கிலாந்து அணி மேலும் 214 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி பெறும். 6 விக்கெட் இங்கிலாந்து அணியின் கைவசம் இருப்பதால் இங்கிலாந்து அணிக்கும் வெற்றி வாய்ப்பு உள்ளது.
 
வெளிநாட்டு மண்ணில் இந்தியா வெற்றி பெற்று 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதே சமயம் லார்ட்ஸ் மைதானத்தில் 28 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
 
கடைசியாக 1986ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான அணி 5 விக்கெட்டில் வெற்றி பெற்று இருந்தது. இன்று கடைசி நாள் ஆட்டம் என்பதால் போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ad

ad