புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூலை, 2014





சென்னை :  


விரிவுபடுத்தப்பட்ட சென்னையில் 22 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதனை உடைத்து சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை மேற்கு, சென்னை கிழக்கு என 4 மாவட்டங்களாக உருவாக்கியிருக்கிறார்கள்.



சென்னை வடக்கில் திருவொற்றியூர், மாதவரம், பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன. தற்போதைய மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், சேகர்பாபு, கனி மொழியின் ஆதரவாளர் முன்னாள் அமைச்சர் கே.பி. பி.சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. மதிவாணன் ஆகி யோரிடம் வேகம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனத்தின் சொந்த தொகுதி (மாதவரம்) இங்கு மாட்டிக் கொண்டிருப்பதால் அவரும் குறிவைக்கிறார்.

சென்னை தெற்கில் சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய ச.ம. தொகுதிகள் அடங்கியிருக்கின்றன. இந்த 5 தொகுதிகளிலும் வன்னியர் சமூகம் மிக வலிமையாக இருக்கிறது. மாவட்ட எல்லைகளும் இதனை மையமாக வைத்தே பிரிக்கப்பட்டது என்பதால் வன்னியர் ஒருவரே இங்கு மா.செ.வாகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள். இந்த நிலையில், முன்னாள் மேயரும் இளைஞரணியின் மாநில துணைச் செயலாளருமான  மா.சுப்ரமணியன், கே.கே.நகர் தனசேக ரன், பரங்கிமலை ஒ.செ. பாலவாக்கம் விஸ்வநாதன், பொன் முடி ஆதரவில் சைதை ப.செ. மகேஷ் ஆகியோர் மல்லு கட்டுகிறார்கள்.

சென்னை மேற்கில் மதுரவாயல், அண்ணாநகர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, மயிலாப்பூர், தி.நகர் ஆகிய 6 ச.ம.தொ. அடங்கிய இந்த மாவட்டத்தை தக்கவைத்துக் கொள்ள தற்போதைய மா.செ. ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., ஸ்டாலினிடம் போராடி வருகிறார். ஆனால், இவரிடமிருந்து தட்டிப்பறிக்க தலைமைச் செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம், ஆயிரம் விளக்கு ப.செ. அன்புதுரை, சேப்பாக்கம் ப.செ. மதன்மோகன், மதுரவாயல் கணபதி ஆகியோர் முண்டா தட்டுகிறார்கள்.

சென்னை கிழக்கில் துறைமுகம், எழும்பூர், கொளத் தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், அம்பத்தூர் ஆகியவை தொகுதிகள். வடசென்னை வேட்பாளர் கிரிராஜன், முன் னாள் எம்.எல்.ஏ.க்கள் புரசை ரெங்கநாதன், செங்கை சிவம், அம்பத்தூர் நீலகண்டன், அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், ஆலப்பாக்கம் சண்முகம் ஆகியோர் ரேசில் இருக்கிறார்கள். இந்த மாவட்டத்தில் பழைய முகங்களைத் தாண்டி புதிய முகங்களாக, இளைஞர்களாக இருப்பவர்களில் பொருளாதார ரீதியிலான வலிமை, ஃபீல்டு வொர்க்கில் திறமை ஆகியவை இல்லாமலிருப்பது மாவட்டத்தின் துரதிர்ஷ்டம். இதனால் வயதான சீனியர்கள் குஷியாக இருக்கிறார்கள். ஆனால் வயதான, மக்களிடம் நெகடிவ் ப்ரொஃபைல் கொண்டவர் களை மா.செ.வாக்கக்கூடாது என்பதில் தலைமை உறுதியாக இருந்தால் சென்னை வடக்கில் காய் நகர்த்தும் நபர்களில் ஒருவர் இங்கு ட்ரான்ஸ்ஃபர் ஆவதற்கும் வாய்ப்பு உள்ளதாக அறிவாலயத்தில் எதிரொலிக்கிறது.

காஞ்சிபுரம் : 


ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி காஞ்சி வடக்கு என்றும்,  உத்திரமேரூர், காஞ்சிபுரம், செய்யூர், மதுராந்தகம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை அடக்கி காஞ்சி தெற்கு என்றும் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்துள்ளனர்.  இதில் காஞ்சி வடக்கு மா.செ. பதவியை பிடிக்க தற்போதைய மா.செ. தா.மோ.அன்பரசன் முயற்சிக்கிறார். ஆனால், விலகிக்கொள்ளுங்கள் என சொல்லி எந்த ஒரு பொறுப்பையும் ஸ்டாலின் தராமல் இருந்தாலும் அதை ஏற்கும் மனநிலையில் இருக்கிறார் தா.மோ.! அதேசமயம், மாமல்லபுரம் நகரச் செயலாளர் விஸ்வநாதன், பல்லாவரம் நகரச்செயலாளர் இ.கருணாநிதி, தாம்பரம் நகரச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா ஆகியோரிடையே போட்டி அதிகரித்து வருகிறது. காஞ்சி தெற்கு மா.செ. நாற்காலியை கைப்பற்ற உத்திரமேரூர் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர், காஞ்சி நகரச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலையின் மகனுமான சேகர், மாவட்ட பொருளாளர் சுகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.முருகேசனின் மகனும் காஞ்சி ஒ.செ.வுமான பி.எம்.குமார் ஆகியோர் வரிந்துகட்டுகிறார்கள்.

திருவள்ளூர் : 


தமிழகத்திலேயே அதிக வித்தியாசத்தில் (3 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள்) தி.மு.க. தோல்வி யடைந்ததில் முதலிடத்திலிருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தை இரண்டாக உடைத்து, அதற்கு திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் தெற்கு என பெயர் சூட்டியிருக்கிறது அறிவாலயம். கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி ஆகிய ச.ம.தொ. அடங்கிய திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தை கைப்பற்ற முன்னாள் எம்.எல்.ஏ. கும்மிடிப் பூண்டி வேணு, மீஞ்சூர் முன்னாள் ஒ.செ. பாஸ்கர் சுந்தரம், மிசா கேசவனின் மகனும் வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளருமான மீஞ்சூர் சுரேஷ், திருத்தணி நகரச் செயலாளர் சந்திரன், மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஜே.கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலையில் இருக்கிறார்கள்.  தற்போதைய மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனம், சென்னை வடக்கை கைப்பற்ற துடிப்பதால் இந்த மாவட்டத்தில் அவரது கவனம் சற்று பின் தங்கியிருக்கிறது.  திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தில் திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி ஆகிய ச.ம.தொ. அடங்கியிருக்கிறது. இங்கு மா.செ. நாற்காலியில் உட்கார, ஆவடி நாசர், முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி, கல்லூரி அதிபர் வி.ஜி.ராஜேந்திரன், வழக்கறிஞர் பரந்தாமன் ஆகியோர் மும்முரமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

திருச்சி :


லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய 4 தொகுதிகளைக் கொண்ட பகுதி திருச்சி வடக் காகவும்; மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் ஆகிய 5 தொகுதிகளைக் கொண்ட பகுதி திருச்சி தெற்காகவும் பிரிக்கப்பட்டி ருக்கிறது.

"திருச்சி தெற்கு மா.செ.வாக நானே இருந்துகொள் கிறேன்' என்கிறார் சிட்டிங் மா.செ.வும் மாஜி மந்திரியுமான கே.என்.நேரு. கட்சித் தலைமையோ "நீங்கள் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிடுங்களேன்' என்றது. நேருவோ, "தெற்கை கொடுங்கள். இல்லை யெனில் அமைதியாகிவிடுகிறேன்' என்று சொல்லிவிட்டதாக தகவல் கிளம்பியுள்ளது. எனினும் மாநகர் செயலாளர் அன்பழகன், எக்ஸ் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன் போன்றோரும் ஒருவித எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். திருச்சி வடக்கு மா.செ. பதவியை தங்களில் ஒருவர் பெற்றுவிட வேண்டுமென மாஜி மந்திரி செல்வராஜ் தரப்பு பரபரக்கிறது. ஆனால் இவரது ஆதரவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. லால்குடி சிட்டிங் எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன், இளைஞரணி ஸ்ரீரங்கம் ஆனந்த், சீமானூர் பிரபு ஆகியோரும் ரேஸில் இருக்கிறார்கள்.


கரூர் :


அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய 4 தொகுதிகளைக் கொண்ட மாவட்டப் பொறுப்பாளராக இருப்பவர் நன்னியூர் ராஜேந்திரன். மாஜி மந்திரி கரூர் சின்னசாமி, எக்ஸ் எம்.எல்.ஏ. கே.சி.பி. ஆகியோர் வயோ திகம் காரணமாக போட்டியில் இடம் பெற வில்லை. எனினும் கே.சி.பி. மகன் சிவராமன் ரேஸில் இருக்கிறார். 

பெரம்பலூர் :


குன்னம், பெரம்பலூர் ஆகிய இரண்டு தொகுதிகளை மட்டும் கொண்ட சின்னஞ்சிறு தொகுதி. சிட்டிங் மா.செ.வாக இருப்பவர் எக்ஸ் எம்.எல்.ஏ. துரைசாமி. வி.ஜி. வெங்கடாச்சலம், மாவட்ட துணைச் செயலாளர் குன்னம் ராஜேந்திரன், "நகரம்' ராஜேந்திரன், ஜெயபால், ஜெகதீசன், பிரபாகரன் போன்றோரும் ரேஸில் இருக்கின்றனர். உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்களே அ.தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகளில் மா.செ.வாக இருப்பதால் தி.மு.க.விலும் அச்சமூகத்துக்கே வாய்ப்பு கிடைக்கலாம்.

அரியலூர் :


அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இரண்டே இரண்டு தொகுதிகளைக் கொண்ட இந்த சின்னஞ்சிறு மாவட்டத்தின் செயலாளராக இருப்பவர் சிவசங்கர். தீவிர உழைப்பாளி என்று பெயரெடுத்தவர். புகார்கள் எதிலும் சிக்காதவர். எனவே இவரே மா.செ. பதவியில் தொடர்வார் என்கிறார்கள் மாவட்டத்தின் ஒட்டுமொத்த உ.பி.க்களும். எனினும் செந்துறை ஒ.செ. ஞான மூர்த்தி, த.பழுர் ஒ.செ. கண்ணன், இளைஞரணி இளையராஜா, வழக்கறிஞர் பிரிவு சாந்தி, திருமானூர் தனபால், ஸ்டாலினுக்கு நெருக்கமான இளைஞரணி சுபா சந்திரசேகரன் போன்றோர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

திருவாரூர் :


மன்னார்குடி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய 4 தொகுதிகளை மட்டுமே கொண்டிருப்பதால் திருவாரூர் மாவட்டம் பிரிக்கப்படவில்லை. சிட்டிங் மா.செ. பூண்டி கலைவாணன், தனது நாற்காலியைத் தக்கவைக்கப் போராடுகிறார். மாஜி அழகு திருநாவுக்கரசின் செயல் வேகம் அறிவாலயத்தை ஈர்த்திருக்கிறது என்கிறார்கள். இவரோடு டி.ஆர்.பாலு மகன் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் போன்றோரும் ரேஸில் உள்ளனர். மாஜி மந்திரி மதிவாணனுக்கு ஆசை இருந்தும் ஏனோ அதை வெளிப்படுத்தத் தயங்குகிறார்.

நாகை :


மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 3 தொகுதி களைக் கொண்ட பகுதி நாகை வடக்கு மாவட்டமாய் ஆக்கப் பட்டிருக்கிறது. தொழில்வளம் அதிகமுள்ள பகுதி. ஸ்டாலினின்  தீவிர ஆதரவாளரான சிட்டிங் மா.செ.வான ஏ.கே.எஸ்.விஜயன் நம்பிக்கையோடு உள்ளார். தனக்கு இல்லையெனில் செம்பனார் கோயில் முன்னாள் ஒன்றிய சேர்மன் நிவேதா முருகனுக்கு அந்தப் பதவியைக் கொடுக்க வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு. இதற்கிடையே எக்ஸ் எம்.எல்.ஏ.க்களான குத்தாலம் கல்யாணமும் அவர் மகன் அன்பழகனும் இந்த நாற்காலியைப் பிடிக்க ஜரூராக உள்ளனர். ஆனால் தேர்தலில் சாதி ரீதியில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக தலைமைக்குப் புகார்கள் போயுள்ளன.  உ.பி.க்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற எக்ஸ் எம்.எல்.ஏ.வான வழக்கறிஞர் சீர்காழி பன்னீர்செல்வமும் ரேஸில் இருக்கிறார். நம்பி.தேவேந்திரன் மகன் சத்யேந்திரனும் எதிர்பார்க்கிறார். நாகை தெற்கு மாவட்டத்தில் நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய மூன்று தொகுதிகள் உள்ளன. இதன் மா.செ. நாற்காலியைக் குறிவைத்து வேதாரண்யம் எக்ஸ் எம்.எல்.ஏ.வேதரத்தினம், நாகை ஒ.செ. ராஜேந்திரன், கீழ்வேளூர் ஒ.செ. கோவிந்தராஜ் போன்றோர் பரபரக்க... இளைஞரணி திருக்குவளை மேகநாதனும் ரேஸில் இருக்கிறார்.

ad

ad