புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2014


சுவிஸ் லுசேர்ணில் நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்

23வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளானது, 05.07.2014  சனிக்கிழமை அன்று லுசெர்ண் மாநிலத்தில்  அமைந்துள்ள Allmendமைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் விளையாட்டுத்துறையினரால்  நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளானது பொதுச்சுடரேற்றலுடன், சுவிஸ் மற்றும் தமிமீழத் தேசியக்கொடியுடன், விளையாட்டுத்துறைக்கொடியும் ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம் செலுத்தப்பட்டு விளையாட்டு வீரர்களும் பார்வையாளர்களும் மலர்வணக்கம் செலுத்தியதை தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகியது.


எதிர்கால சந்ததியினரிடம் மாவீரர்களின் நினைவுகளை பேணவும், தமிழ்த்தேசியத்திற்கு வலுச்சேர்க்க தாயகம் நோக்கிய தேடலுடன், விளையாட்டுக்களை ஊக்கிவித்து வளர்க்கும் நோக்கிலும் ஒழுங்கமைக்கப்பட்ட இவ் விளையாட்டுப் போட்டிகளில் வளர்ந்தோர், இளையோர், சிறுவர் மற்றும் பெண்கள் உதைபந்தாட்டங்களுடன், துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம் போன்ற போட்டிகள் பல மைதானங்களில்  விறுவிறுப்பாக நடைபெற்றது.  80 விளையாட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் தேசிய மாவீரர் நினைவு சுமந்த இவ்விளையாட்டுப் போட்டியில் ஆர்வத்தோடு பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


உலகக்கிண்ண போட்டிகள் நடக்கும் இக்காலப்பகுதியில் எமது வீரர்களும் சிறப்பான யுக்திகளை கையாண்டு நட்புடன் விளையாடி தமது வெற்றிகளை பெற்றனர். வெற்றி பெற்ற கழகங்களைச் சேர்ந்த வீரர்களுக்கான பதக்கங்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தமிமீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு தமிழர்களின் தாரக மந்திரமான தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற கோசத்துடன் போட்டிகள் யாவும் நிறைவடைந்தன.


இவ் விளையாட்டுப்போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் எமது நன்றியினையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
















ad

ad