புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2014


காசா மீதான இஸ்ரேல் வான் தாக்குதல்கள் தீவிரம்: இதுவரை 28 பலஸ்தீனர்கள் பலி

மேலும் 40,000 துணைப்படையினருக்கு இஸ்ரேல் அவசர அழைப்பு

பலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது மேலும் பல ரொக்கெட் தாக்குதல்களை நடத்திய தோடு பதிலுக்கு இஸ்ரேல் காசா மீது
வான் தாக்குதலை அதிகரித்திருக்கும் நிலையில் அங்கு மோதல் தீவிரமடைந்துள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தெற்கு இஸ்ரேல் மீது நான்கு ரொக்கெட்டுகள் தாக்கியதாகவும் இந்த தாக்குதல் நேற்று புதன் கிழமையும் நீடித்ததாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை நோக்கி வந்த இரு ரொக்கெட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
பதிலடியாக செவ்வாய்க்கிழமை இரவு காசா மீது 160 வான் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. அண்மைய தாக்குதல்களில் 28 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 70 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து இஸ்ரேலியரும் தமது இலக்கா கும் என்று ஹமாஸின் இராணுவ பிரிவு எச்சரித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு காசா வில் இருக்கும் 118 ரொக்கெட் தாக்குதல் நடத்தும் தளங்கள், 10 ஹமாஸ் கட்டளைத் தளங்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் 10 சுரங்கப்பாதைகள் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் காசா மீது முன்னெடுத்திருக்கும் இராணுவ நடவடிக்கைக்கு 'பாதுகாப்பு விளி ம்பு நடவடிக்கை' என்று பெயரிடப் பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் இதுவரை காசாவின் 440 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.
இஸ்ரேல் வான் தாக்குதலில் தமது போரா ளிகள் கொல்லப்பட்டதை அடுத்தே ஹமாஸ் இஸ்ரேல் மீதான ரொக்கெட் தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காசாவில் இருந்து 117 ரொக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட் டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள் ளது. இதில் இஸ்ரேலின் அயன் டோம் ஏவு கணை பாதுகாப்பு முறை 20 ரொக்கெட்டு களை இடைமறித்து தாக்கி அழித்துள்ளன. nஜரூசலம் பகுதியில் மூன்று ரொக்கெட்டு கள் விழுந்துள்ளன.
இதில் நேற்று காலை டெல் அவிவை நோக்கி வந்த ரொக்கெட் டுகளை அயன் டோம் இடைமறித்து அழித் துள்ளது. அதேபோன்று வடக்கு காசாவில் இருந்து 100 கிலோமீற்றருக்கு அப்பால் இருக்கும் இஸ்ரேலின் ஹதரா நகர் மீது ஹமாஸ், நிலத்தில் இருந்து நிலத்தை தாக் கும் எம்-302 ரொக்கெட் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது காசாவிலிருந்து இஸ்ரேல் மீது தூர நடத்தப்பட்ட தாக்கு தலாகும்.
மறுபுறத்தில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் மோட்டார் சைக்கிளில் சென்ற அடையாளம் தெரியாத ஒருவர் கொல்லப்பட் டதாக காசா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் தாம் இஸ்லாமிய ஜpஹாத் குழு உறுப்பினர் அப்துல்லாஹ் தைபுல்லாஹ்வை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டுள்ளது.
ரொக்கெட் தாக்குதல் அபாயத்திற்கு முடிவுகட்ட "ஹமாஸ{க்கு எதிரான இராணுவ நடவடிக்கை பாரிய அளவில் விரிவுபடுத்தப் படும்" என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு உறுதி அளித்துள்ளார். இந்த ரொக்கெட் தாக்குதல்களை நடத் தும் காசாவுக்கு தரைவழியாக துருப்புகளை அனுப்ப வாய்ப்பு இருப்பதாகவும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இஸ்ரேலின் 40,000 துணை படையினரை அவசர இராணுவ சேவைக்கு இஸ்ரேல் அழைத்துள்ளது. ஏற்கனவே நூற் றுக்கணக்கான துணைப்படையினர் காசா எல்லைக்கு அனுப்பி அங்கு இராணுவ பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போதைய நிலையை சுமுகப்படுத்துவதை விடவும் முடிவுக்கு கொண்டுவருவதை இலக்காக கொண்டு செயற்படுவதாக நெதன்யாகுவின் பேச்சாளர் மார்க் ரெகேவ் குறிப்பிட்டுள்ளார். "ஹமாஸ் தொடர்ச்சியாக ரொக்கெட் தாக்குதல் நடத் தும் நிலையில் நிலைமையை சுமுகமாக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. தற்போது ஹமாஸின் இராணுவ செயற்பாட்டை செய லிழக்கச் செய்து இதனை முடிவுக்கு கொண் டுவர இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது" என்று குறிப்பிட்டார்.
"யுத்த நிறுத்தமொன்றுக்கு சென்று அடுத்த வாரமே இஸ்ரேல் பிரiஜகள் ரொக்கெட் தாக்குதலுக்கு முகம் கொடுக்கும் உடனடித் தீர்வொன்றுக்கு செல்ல எம்மால் முடியாது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் காசா மீதான தாக்குதலை உடன் நிறுத்துமாறு இஸ்ரேலை வலியுறுத்தி இருக் கும் பலஸ்தீன நிர்வாகத்தின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அனைத்து தரப்பும் அமைதி காக்குமாறு கோரியுள்ளார்.
ஆனால் இஸ்ரேல் கடந்த 2012 ஆம் ஆண்டு எகிப்து மத்தியஸ்தத்தில் செய்து கொண்ட யுத்த நிறுத்தத்தை மீறியிருப்பதாக ஹமாஸ் பேச்சாளர் அபு+ ஒபைதா குறிப் பிட்டுள்ளார். "இந்த ஆக்கிரமிப்பு நடவடிக் கைக்கு மத்தியில் சியோனிஸ எதிரிகள் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை பற்றி கனவு காணக்கூடாது" என்று அவர் எச்சரித்தார். இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட வர்களில் கடந்த செவ்வாய்க்கிழமை காசா நகரில் காரில் சென்றுகொண்டிருந்த நான்கு ஹாமாஸ் உறுப்பினர்களும் அடங்குகின்ற னர். இவர்கள் சென்ற கார் இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கானது. இதில் சிரேஷ்ட போராளிகளில் ஒருவரான மொஹம்மத் சபானும் அடங்குகிறார்.
அதேபோன்று தெற்கு நகரான கான் யு+னிஸில் இருக்கும் ஹமாஸ் தலைவர் ஒரு வரின் வீடு தாக்கப்பட்டதில் 6 பேர் கொல்லப் பட்டனர். இவர்களில் இரு சிறுவர்களும் அடங்குவதாக காசா சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் குத்ரா குறிப்பிட் டுள்ளார். இந்த தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டிருக்கும் ஹமாஸ் பேச்சாளர் ஒருவர், இது ஒரு "பயங்கர யுத்த குற்றம்" என்று சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் வயதான பெண் ஒருவர் உட்பட மேலும் மூவர் கொல்லப்பட்டனர். நுஸைரத் அகதி முகாம் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 60 வயது அபு+ குவைக் என்ப வரும் அவரது 31 வயது மகன் காலித் என்ப வரும் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. மத்திய காசாவின் அல் முக்ரக்கா கிராமத்தின் மீது நடத்தப்பட்ட பிறிதொரு தாக்குதலில் வயதான பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
எனினும் இஸ்ரேலுடனான யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு ஹமாஸ் ஆயுதப் பிரிவான அல் குத்ஸ் படை கடந்த செவ்வாய்க்கிழமை நிபந்தனைகளை விதித்திருந்தது. அதன்படி இஸ்ரேல், காசா மீது நடத்தும் அனைத்து வான் தாக்குதல்களையும் நிறுத்தி 2012இல் செய்துகொள்ளப்பட்ட யுத்த நிறுத்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது. அத்துடன் 'லித் கைதிகள் பரிமாற்றத்தில் விடுவிக்கப்பட்டு மீண்டும் கைதுசெய்யப்பட்டிருக்கும் பலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் பலஸ்தீ னின் புதிய ஐக்கிய அரசில் தொடர்ந்தும் தலையிடக் கூடாது என்றும் ஹமாஸ் நிபந்தனை விதித்துள்ளது.
கடந்த வாரத்தில் மூன்று இஸ்ரேல் இளைஞர்கள் கடத்திக் கொல்லப்பட்டது மற்றும் அதனைத் தொடர்ந்து ஒரு பலஸ்தீன சிறுவன் கடத்திக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே இஸ்ரேல், பலஸ்தீன பதற்றம் தீவிரம் அடைந்தது. இஸ்ரேல் இளைஞர்களின் கடத்தலின் பின்னணியில் ஹமாஸ் இருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுகின்றபோதும் அதனை ஹமாஸ் மறுத்துள்ளது.

ad

ad