புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜூலை, 2014


40 குடிசைகள் மண்ணில் புதைந்தன - 170 பேர் கதி என்ன?
மகாராஷ்ட்ர மாநிலம் புனே அருகில் உள்ள மாலின் கிராமத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 40 குடிசைகள் சிக்கியுள்ளன. இவற்றில் இருந்த 170 பேர் மண்ணில்
புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பேரிடர் மேலாண்மை வீரர்கள் தொடர்ந்து மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புனேயில் இருந்து 120 கி.மீ., தொலைவில், மலைகள் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது மாலின் கிராமம். நகரத்தில் இருந்து மிகவும் தள்ளி அமைந்துள்ள இந்த குக்கிராமத்திற்கு சரியான சாலை வசதிகளோ, போக்குவரத்து வசதிகளோ இல்லை. 
இந்த கிராமத்தில், மலையடிவாரத்தில் 40 குடிசை வீடுகள் இருந்தன. இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அருகில் இருந்த மலைப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. வேகமாக சரிந்து வந்த மண், 40 குடிசைகள் மீது விழுந்து, அவற்றை புதைத்தது.
இந்த குடிசை வீடுகளில் 170க்கும் மேற்பட்டோர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. கனமழை காரணமாக அவர்கள் அனைவரும் வீட்டிற்குள் இருந்த நேரத்தில் தான் இந்த சோக சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
 மண்சரிவு குறித்த தகவல் அறிந்ததும் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவின் 7 பிரிவுகள் கிராமத்திற்கு விரைந்து, மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

ad

ad