புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2014


46 செவிலியர்களுடன் கொச்சி வந்தது விமானம்
ஈராக்கில் விடுவிக்கப்பட்ட 46 செவிலியர்களுடன் ஏர் இந்தியா விமானம் கொச்சி வந்தடைந்தது.
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 46 நர்சுகளை ஏற்றி வரும்
போயிங் 777 ரக ‘ஏர் இந்தியா’ சிறப்பு விமானம் காலை 9.30 மணியவில் மும்பை வந்தடைந்தது. 11.50 மணியளவில் கொச்சி வந்தடைந்தது.

முன்னதாக, ஈராக்கின் மொசூல் நகரில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட 46 இந்திய நர்சுகளும் போர் பதற்றமற்ற எர்பில் பகுதிக்கு அழைத்து வரப்பட்டு, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 
அங்கு மேலும் 137 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு மொத்தம் 183 இந்தியர்களுடன் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்ட இந்த சிறப்பு விமானம், காலை 9.30 மணியளவில் மும்பை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. 
மும்பையில் இறங்க வேண்டிய சிலரை இறக்கி விட்ட பின்னர், அங்கு எரிபொருள் நிரப்புதல், பயணிகளுக் கான உணவுகளை சேகரிப்பது போன்றவற்றை முடித்த பிறகு அதே விமானம் சற்று நேரத்தில் மும்பையில் இருந்து புறப்பட்டு நண்பகல் 11.50 மணியளவில் கொச்சி விமான நிலையத்தை சென்றடைந்தது.   அங்கு கேரளாவை சேர்ந்த நர்சுகளை இறக்கி விட்ட பின்னர், சுமார் 100 பயணிகளை இறக்கிவிட அந்த விமானம் ஐதராபாத்துக்கு செல்கிறது. அதன் பின்னர், மேலும் சிலரை இறக்கி விட டெல்லி செல்கிறது.

ad

ad