புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூலை, 2014


 ஈராக்கில் கடத்தப்பட்ட இந்திய நர்ஸ்கள் 46 பேரையும் கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ள நிலையில், சனிக்கிழமையன்று அவர்கள் இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர்.
விடுவித்த நர்ஸ்களை ஈராக் ராணுவத்திடம் கிளர்ச்சியாளர்கள் ஒப்படைத்ததை தொடர்ந்து, துள்ளதாகவும், அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக எர்பில் விமான
நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி இன்று காலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேசினார். அப்போது இதுகுறித்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நாளை கொச்சி வருகை
இந்நிலையில் விடுவிக்கப்பட்ட 46 இந்திய செவிலியர்களும், மேலும் 70 இந்தியர்களும் நாளை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட உள்ளதாகவும், செவிலியர்கள் அனைவரும் கேரள மாநிலம் கொச்சிக்கு விமானம் மூலம் வர உள்ளதாகவும் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் செய்யது பக்ருதீன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஈராக் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போரினால், பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது.
செவிலியர்களை அழைத்து வர ஏர் இந்தியா சிறப்பு  விமானம் ஈராக் புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்த விமானத்தில், மத்திய வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகளும் செல்கிறார்.  எர்பில் விமான நிலையத்தில்  ஏர் இந்தியா விமானம் இன்றிரவு தரையிறங்கும்.
நர்ஸ்கள், நாளை காலை, கொச்சிக்கு அழைத்து வரப்படுகின்றன. முதலில் கொச்சி வரும் விமானம் தேவை ஏற்பட்டால் டெல்லி விமான நிலையத்திற்கும் வரும். 
செவிலியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் துன்புறுத்தப்படவில்லை. தூதரக அதிகரிகளுடன்  அவர்கள் தொடர்பில் உள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய கிழக்கு நட்பு நாடுகளிடம் இருந்து தேவையான உதவிகள் எங்களுக்கு கிடைத்தது.  கடத்தபட்ட  இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய  இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. போர் நடைபெற்று வரும் பகுதிகளில் இன்னும் ஏராளமான இந்தியர்கள் சிக்கியுள்ளனர். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள ஏனைய இந்தியகளை மீட்க கடும் முய்ற்சி எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
முன்னதாக ஈராக்கில் ஆளும் அரசுக்கும், சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற போரில் ஈராக்கில் உள்ள பல முக்கிய நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

திக்ரித் நகரில் உள்ள மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த நர்ஸ்கள் உள்ளிட்ட 46 இந்திய நர்ஸ்கள் தீவிரவாதிகளிடம் சிக்கினர். அவர்களை  கிளர்ச்சியாளர்கள் நேற்று வலுக்கட்டாயமாக வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். கடத்தப்பட்ட தங்களை மொசூல் நகரில் உள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றில் தங்க வைத்திருந்ததாகவும், தாங்கள் நல்ல முறையில் நடத்தப்பட்டதாகவும் இந்திய செவிலியர்கள் தெரிவித்திருந்தனர்.

ad

ad