புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூலை, 2014

தைவானில் விமான விபத்து: 47 பேர் பலி.11 பேர் கடும் காயம் 

தைவான் நாட்டில் டிரான்ஸ்ஏசியா விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக பெங்கு தீவில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 47பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தைவானிலுள்ள கோசியுங்கிலிருந்து மாகுங் பகுதிக்கு ஏ.டி.ஆர்.-72 ரக பயணிகள் விமானம் ஒன்று 54 பயணிகளுடன் இன்று மாலை 5.43 மணிக்கு புறப்பட்டுள்ளது.
4 மணிக்கே புறப்பட வேண்டிய அந்த விமானம் மோசமான வானிலை காரணமாக தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது.
ஆனால், தொடர்ந்து வானிலை சரியில்லாத காரணத்தால் அந்த விமானம் சென்றடைய வேண்டிய மாகுங் நகரில் தரையிறங்க முடியவில்லை. எனவே விமான அதிகாரிகள் 7.06 மணி வரை காத்திருக்குமாறு விமானியிடம் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, விமானியும் சிறிது நேரத்திற்கு பிறகு விமானத்தை தரையிறக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அவரது முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது.
பின்னர் 2-வது முறையாக தரையிறங்க அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அதற்குள் விமானியுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
அதன்பிறகு கிடைத்த தகவலில், அந்த விமானம் பெங்கு தீவிலுள்ள ஹூஷி குடியிருப்பு பகுதியில் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. இதில், 2 வீடுகளும் சேதமடைந்து தீப்பிடித்தன.
முதற்கட்ட விசாரணையில், விமானம் பெங்கு தீவிற்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது கடுமையான மழையும், மோசமான காற்றும் வீசியதால் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று தெரிவிக்கிறது.
இதில் 47பேர் பலியாகியுள்ளதாகவும், 11 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad