புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூலை, 2014


நடிகை நக்மா கைது!

உத்தரபிரதேச மாநிலம், மொரதாபாத்தில் காந்த் பகுதியில் உள்ள இந்துக் கோவில் ஒன்றில் ஒலிப்பெருக்கி அமைப்பதில் கடந்த 4-ந் தேதி பிரச்சினை ஏற்பட்டது. அது கலவரமாக மாறியது. இதில் மாவட்ட கலெக்டர் தீபக் அகர்வால் கண்களில் படுகாயம் ஏற்பட்டது. இந்த கலவர வழக்கில் பாரதீய ஜனதா கட்சியினர் 62 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போலீஸ் சூப்பிரண்டு தரம்வீர் சிங் வன்கொடுமையை கட்டவிழ்த்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
இந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும், இந்துக் கோவிலில் மீண்டும் ஒலிபெருக்கி அமைக்க அனுமதி அளிக்கக் கோரியும் காந்த் போலீஸ் நிலையம் நோக்கி N²d¡ZûU அணிவகுத்து செல்லப்போவதாக பாரதீய ஜனதா கட்சியினர் அறிவித்திருந்தனர்.

இதேபோன்று காந்த் பகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மதுசூதன் மிஸ்திரி தலைமையில் அமைதிப்பேரணி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

பாரதீய ஜனதா, காங்கிரஸ் பேரணிகளையொட்டி, மொரதாபாத் நகரில் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பாரதீய ஜனதா தலைவர்களை போலீசார் கைது செய்யத் தொடங்கினர். இதற்கிடையே உத்தரபிரதேச மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவர் லட்சுமிகாந்த் பாஜ்பாய், செய்தி தொடர்பாளர் சந்திரமோகன், ஒரு எம்.எல்.ஏ., மற்றும் தொண்டர்கள் அணி திரண்டு சென்று, கலெக்டர் வீட்டினை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பாரதீய ஜனதா பேரணியில் கலந்துகொள்ள வந்த சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் அஜய் அகர்வால் மற்றும் பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அமைதிப்பேரணியில் பங்கேற்பதற்காக காசியாபாத்திலிருந்து மொரதாபாத் நோக்கி புறப்பட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் மதுசூதன் மிஸ்திரி, உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் நிர்மல் கத்ரி, கட்சியின் சட்ட மேல்சபை தலைவர் நசீப் பதான், நடிகை நக்மா ஆகியோரையும் போலீசார் தடுத்து கைது செய்தனர். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது.

ad

ad