புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2014




""ஹலோ தலைவரே.. … பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் கடந்த மூணு வருசமா நேரில் வந்து அஞ்சலி செலுத்தாத ஜெயலலிதா, இந்த முறை காமராஜர் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருக்காரே?''

""சட்டமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க.வே இப்பவே ரெடியாக ஆரம்பிச்சிடிச்சிங்கிற அடையாளம்தாம்ப்பா இது. காமராஜர் சிலைக்கு அவர் மலர் தூவியபோது, அந்தப் பூத்தட்டை பவ்வியமா எடுத்துக்கொடுத்தவர் செய்தித்துறை இயக்குநர் ராஜாராம். அவர் மேலே ஜெ.வுக்கு நம்பிக்கை அதிகம்னு கோட்டை வட்டாரத்தில் சொல்றாங்கப்பா.. மோடி பிரதமரானதும் ஜெ. டெல்லிக் குப்போனாரே அந்த சமயத்தில் ராஜாராம் மகளுக்குத் திருமணம். தன் வீட்டுத் திருமண வரவேற்பில் கூட கலந்துக்காம ஜெவுக்கு முன்பே டெல்லிக்குப்போனாரு ராஜாராம். அந்த விசுவாசம்தான் ஜெ.வுக்கு நம்பிக்கை யைக் கொடுத்து, ராஜாராம் கையில் பூத்தட்டையும் கொடுத்திருக்குது. தி.மு.க ஆட்சியில் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளா கொண்டாட போட்ட சட்டத்தை மூணு வருசமா கண்டுக்காம இருந்த ஜெ, இந்த வருசம் திடீர்னு பிறந்த நாளைக்கு முதல் நாளான ஜூலை 14-ந் தேதியன் னைக்கு கல்வி எழுச்சி நாளா காமராஜர் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுங்கன்னு உத்தரவு போட் டாரு. எல்லாமே சட்டமன்றத் தேர்த லுக்கான முஸ்தீபு தானாம்.''

""அதிகார பலமும் பணசெல்வாக்கும் உள்ள அ.தி.மு.க ஜெட் வேகத்திலே போய்க்கிட்டிருக்கிற நேரத்தில், தி.மு.க சைடில் என்ன நடந்துக்கிட்டி ருக்குதுன்னு பார்த்தேங்க தலைவரே.. மாவட்டங்களைப் பிரிச்ச மாதிரி ஒன்றியம், நகரம், கிளை வரை பிரிப்புகள் நடக்கும்னு நாம ஏற்கனவே பேசியிருந்தோம். முதல் கட்டமா சென்னை மாநகராட்சியில் உள்ள வார்டுகளைப் பிரிச்சிருக்காங்க. மாவட்டங்களிலிருந்து வார்டுகள் வரைக்கும் புதிய பொறுப்பாளர்களை நியமிக்கிறதா அல்லது தேர்தல் நடத்தி தேர்வு செய்வதான்னு மேலிடத்தில் குழப்பம் இருப்பதால அது தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்துக்கிட்டிருக்குது. கட்சி சீர்திருத்த நடவடிக்கைகளில் பிரேக் விழுந்திருக்குது.''

""மாவட்டங்களைப் பிரிச்ச வேகத்தில் அதற்கானப் பொறுப்பாளர்களையும் அறிவிச்சிருந்தா இந்தக் குழப்பமே இருந்திருக்காதே?''


""அதுதான் பெரும்பாலானவங்களோட மனநிலையா இருக்குது. ஆனா, மாவட்ட பிரிப்பு பற்றி அறிவிச்சி நாளாகுது. எம்.பி. தேர்தலுக்கு முன்னாடியே கிளைக்கழக அளவில் தேர்தல்களும் நடத்தப்பட்டு, மா.செ.க் களுக்கு வேண்டியவங்களே பெரும் பாலும் ஜெயிச்சிருக்காங்க. அதனால மா.செ.க்கள் பலரும் என்ன சொல்றாங் கன்னா, இந்தக் கிளைக்கழகத் தேர்தலில் ஜெயிச்சவங்கதான் நகர, ஒன்றிய செய லாளர்களைத் தேர்வு செய்யப்போறாங்க. அதனால நிர்வாகிகளுக்கானத் தேர்தல் நடத்துங்கன்னு வலியுறுத்துறாங்களாம். பழைய மாவட்டத் தைத் தங்களோட கண்ட்ரோலிலும், புதிய மாவட்டங் களைத் தங்களுக்கு வேண்டியவங் களோட கண்ட் ரோலிலும் வச் சிக்கலாம்ங்கிறது இவங்க கணக்கு. கலைஞரைப் பொறுத்தவரைக்கும், நிர்வாகப் பொறுப்பில் புதிய ஆட்கள் இருக்கணும்னு நினைக்கிறாரு. அதனால நியமனம்தான் சரியா இருக்கும்ங்கிறது அவரோட முடிவு.''

""கலைஞர் எடுக்கிற முடிவை, கடைசிக்கிளை வரை செயல்படுத்தக் கூடியவர் மு.க.ஸ்டாலின் தானே, அவர் என்ன சொல்றாராம்?''

""அவரைப் பொறுத்தவரைக்கும் தன்னோட ஆதரவாளர்களை விட்டுக் கொடுக்கக்கூடாதுன்னு நினைக்கிறார். பெரும்பாலான மா.செக்கள் அவருக்கு ஆதரவானவங்கதான். அதோடு, அழகிரி விவகாரத்தின்போது தன்கூட நின்னவங்க, அழகிரி சைடிலிருந்து தன் பக்கம் வந்து கட்சி வேலைகளைக் கவனிக்கிறவங்க இவங்களோட மரியாதைக்கெல்லாம் பங்கம் வந்திடக்கூடாதுன்னு நினைக்கிறாராம். மா.செக்கள் ஏற்கனவே தங்கள் பலத்தை நிரூபிக்கிற வகையில் கிளைக்கழகத் தேர்தலை நடத்திட்டதால, அவங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மற்ற நிர் வாகப் பொறுப்பு களுக்கும் தேர்தல் நடத்திடலாம்ங்கிறதுதான் ஸ்டாலினோட நிலை.''

""போனமுறை நாம பேசிக்கிட்டப்ப, பஞ்சாப் ஹைகோர்ட் தலைமை நீதிபதியா நியமிக்க பரிந்துரைக்கப்பட்ட கர்நாடக ஹை கோர்ட் நீதிபதி மஞ்சுநாதா சம்பந்தப்பட்ட ஃபைலை பிரதமர் அலுவலகமும் சட்டஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அலுவலகமும் திருப்பி அனுப் பிடிச்சின்னு சொன்னோம்ல. அந்த விவகாரம் இப்ப பூதாகரமாகியிருக்குதே, அவரைப் பரிந்துரைத்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கொலீஜிய மோ மஞ்சுநாதா தான் பஞ்சாப் ஹைகோர்ட் தலைமை நீதிபதின்னு உறுதியா இருக்குதாமே?''

""இது சம்பந்தமா வெளிவரும் தகவல்களோடு நானும் சில தகவல்களை விசாரிச்சேங்க தலைவரே.. .. சில புகார்களின் அடிப்படையில் தான் பரிந்துரையை திருப்பி அனுப்புறோம்ங் கிறது மத்திய அரசோட நிலைப்பாடு. பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட் நீதிபதியை நியமித்தவர் இந்த மஞ்சுநாதாதான்ங்கிறதால தமிழக அரசியல் வட்டாரத்திலும் இந்த விவகாரம் கூடுதலா கவனிக்கப்படுது. ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி இடமாற்றத்துக்குப் பதி லாகத்தான் ஹைகோர்ட் நீதிபதிக்கு இந்த பதவி உயர்வுன்னு சில நாட்களுக்கு முன்னாடி முரசொலியில் பூடகமா எழுதப்பட்டிருந்தது. அதற் கான முயற்சிகள் தொடர்ந்தப்பதான் பிரதமர் அலுவலகம் இந்த ஃபைல்களைத் திருப்பி அனுப்பி யிருக்குதுன்னும் போகப் போக என்ன நடக்கு துன்னு பார்ப் போம்னும் ஜூலை 16ந் தேதி முரசொலியில் பெரிய பாக்ஸ் கட்டி யிருந்தாங்க. டெல்லி வட்டாரத்தில் விசாரிச்சேன். அவங்க கருத்து இன் னொரு விதமா இருக்குது. பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட் நீதிபதியை மாற்றம் செய்யும் விவ காரத்தில் மஞ்சுநாதா ஒத்துழைப்பு கொடுக்கலைன்னும் அதனால்தான் அவர் ஃபைல் திருப்பி அனுப்பப் பட்டதுன்னும் ஒரு தகவல் வருது.'' 

""அதாவது ஸ்பெஷல் கோர்ட்டில் நடக்கிற கேஸ்களில் குற்றம்சாட்டப் பட்டவர்களின் எதிர்பார்ப்புக்கு ஆதரவா நடக்கலைன்னு சொல்றாங்களா?''

""தலைவரே.. டெல்லியில் இப்ப தமிழ்நாடு சம்பந்தப் பட்ட வழக்கு விவகா ரங்கள்தான் பரபரப்பா ஓடிக்கிட்டிருக்குது. சங்கரராமன்கொலை வழக்கில் ஜெயேந்திர ருக்கு எதிரான அப்பீல் ஒரு பக்கம் பரபரப் புன்னா, பார்லி மெண்ட்டில் தயாநிதி மாறன் மீதான வழக்கு என்னாச்சின்னு லோக் சபாவில் தம்பிதுரை ஒரு நாள் கேள்வி எழுப்ப, மறுநாள் அதே விவகாரத்தை ராஜ்யசபாவில் மைத் ரேயன் கிளப்புறாரு. சட்டத்தின் பிடியிலிருந்து யாரையும் காப் பாற்றமாட்டோம்னு சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்  சொல்றாரு. அதில், யாரையும்ங்கிற வார்த்தைக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்தாராம். ஒரு விவகாரம்னா அதோடு பல விவகாரங்கள் இணைந்துதான் வருதுன்னு டெல்லியில் உள்ளவங்க சொல்றாங்க. நீதித்துறையின் சுதந்திரமான விவகாரங்களில் மோடி அரசு அடிக் கடி மூக்கை நுழைப்பதா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லோதா உள்பட பல நீதிபதிகளும் நினைக்கிறாங்க. அதன் விளைவுதான், திருப்பி அனுப்பப்பட்ட மஞ்சுநாதா சம்பந்தப்பட்ட ஃபைலை கொலீஜியம் மறுபடியும் பரிந்துரைத்திருக்குதுன்னு சொல்றாங்க.''

""சமுதாய அமைப்புகளுடனான சமூக ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தணும்னு நினைக்கிற ராமதாஸ் அதற்கு எதிரா நிர்வாகிகளின் போக்கு இருந்தா, கட்சியைக் கலைச்சிடுவேன்னு சொன்னதைப் பற்றி போனமுறை பேசியிருந்தோம். பா.ம.க தொடங்கி 25 வருசமானதையடுத்து ராமதாஸ் கொடுத்திருக்கிற வெள்ளி விழா அறிக்கையைப் பார்த்தீங்களா?''

""பார்த்தேங்க தலைவரே...… பா.ம.க.வை ஆட்சிபீடத்தில் உட்கார வைக்கணும்ங்கிறதுதான் அவரோட நோக்கம். தர்மபுரி வெற்றியை அதற்கான முன்னோட்டம்னு சொல்லும் ராமதாஸ், 2016ஆம் ஆண்டோடு, தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் ஆட்சி யைப் பிடித்து 50 வருடமாகுதுன்னும், 2016 சட்டமன்றத் தேர்தலோடு திராவிடக் கட்சிகளின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரணும்னு சொல்லியிருக்காரு. அப்புறம், மதுவிலக்கு உள்ளிட்ட பா.ம.க.வோட தனித் துவமான குரல்களும் அந்த அறிக்கையில் ஒலிக்குது.'' 

""அன்புமணியின் குரல் டெல்லியில் ஒலித்திருக் குதே, என்னவாம்?''

""இலங்கை மேலே ஐ.நா. கொண்டு வரும் சர்வ தேச விசாரணையை இந்தியா ஏற்காதுன்னு வெளி யுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சொன்ன கருத்துக்கு உடனடி கண்டனம் தெரிவிச்ச ராமதாஸ், இதை நேரிலும் வலியுறுத்தணும்ங்கிறதுக்காகத்தான் பா.ம.க எம்.பியான அன்புமணியை டெல்லிக்கு அனுப்பினார். அவர்கூட முன்னாள் எம்.பி. செந்தில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம், வழக்கறிஞர் பாலு இவங்களும் போய் சுஷ்மாவை சந்திச்சிப் பேசினாங்க. தமிழர்களின் உணர்வைப் புரிஞ்சுக்கணும்னு அன்பு மணி எடுத்து சொன்னப்ப சுஷ்மா பொறுமையா கேட்டுக்கிட்டு, வெளியுறவு கொள்கையில் சட்ட விதிகளைப் புறந்தள்ளிட்டு சட்டென ஒரு முடிவெடுக்க முடியாதுன்னு சொல்லியிருக்காரு. அப்போது தேவசகாயம் ஐ.ஏ.எஸ், இந்தியா பலமுறை கண்டித்தபிறகும் இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மேலே தாக்குதல் நடத்துவது பற்றி சொல்லி, வெளியுறவுக்கொள்கை ஒருவழிப்பாதையா இருக்கக்கூடாதுன்னு வலியுறுத்தியிருக்காரு. சுஷ்மாவோ, மீனவர் பிரச்சினை-கடலோர பாதுகாப்பு இதிலெல்லாம் நாங்க அலட்சியமா இல்லைன்னு சொல்லியிருக்காரு. 7 தமிழர்கள் விடுதலை உள்பட பலவற்றையும் பா.ம.க தரப்பு வலியுறுத்தியிருக்குது. அதற்கு சுஷ்மா, நாங்க காங்கிரஸ் போல செயல்படமாட்டோம். பிரதமர்கிட்டே பேசுறேன். அதேநேரத்தில் எதிலும் அவசரமா முடிவெடுக்க முடியாது. எங்க அரசோட பதவியேற்புக்கு ராஜபக்சே வந்தப்பக்கூட அவர்கிட்டே மோடி கடுமையாத்தான் பேசி னாரு. அப்ப நானும் அங்கேதான் இருந்தேன்னு சொல்லியிருக் காரு.''

""வீடியோ புகழ் சாமியார் நித்யானந்தா விவகாரத்தில் கோர்ட் நடவடிக்கைகள் மறு படியும் விறுவிறுப்பாகியிருக்குதே?''

""நித்யானந்தாவை பரிசோதனை செய்வதற்கு செஷன்ஸ் கோர்ட் உத்தரவிட்டும் சீனியர் அட்வகேட்டுகளை வைத்து பகீரத முயற்சியுடன் வாதாடி ஹைகோர்ட்டில் ஸ்டே வாங்கியிருந்தார். அதாவது, உடலளவில் தனக்கு 6 வயசுதான் ஆகுதுன்னும், தான் ஆணுமில்லை, பெண்ணுமில்லைன்னும் அதனால தனக்கு ஆண்மை பரிசோதனை செய்யக்கூடாதுன்னும் நித்தி சொல்லி யிருந்தாரு. நித்தி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததா ஆர்த்திராவ் கொடுத்த புகார், ஓரினச்சேர்க்கை தொடர்பா வினய் கொடுத்த புகார், நித்தியை வீடியோ ஆதாரங்களோடு அம்பலப் படுத்திய லெனின் கருப்பன்கிட்ட மிரட்டல் தொனியில் பேசியது உள்பட எல்லாமும் விசாரிக்கப்படாமல் இருந்தது. அதோடு, இப்ப, போலீஸ் பாதுகாப்போடு நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை பண்ணலாம்னும் அவர் ஒத்துழைக்க லைன்னா கைது செய்யலாம்னும் கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டி ருப்பதுதான் புதுத் திருப்பம். இந்த உத்தரவு வந்தப்ப ஹரித்வாரில் இருந்த நித்தி, விஷயம் கேள்விப்பட்டு வியர்த்து விறு விறுத்துப் போயிட்டாராம். சுப்ரீம் கோர்ட்டுக்குப்போய் தடை வாங்க முடியுமான்னு முயற்சி பண்றாராம்.''

""தமிழக பா.ஜ.கவுக்கு புதுத்தலைவர் யாருங்கிற எதிர்பார்ப்பு கூடியிருக்குதே, யார் பக்கம் காற்று அடிக்குமாம்?''

""அதைப் பற்றி நான் சொல்றேன். கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தை மேலிடப் பொறுப்பாளர்கள் முரளிதர்ராவும், சதீஷும் கூட்டியதால எதிர்பார்ப்பு அதிகமா யிடிச்சி. ஹெச்.ராஜாவை தலைவராக்கி பொன்.ராதாகிருஷ்ணனின் பலத்தைக் குறைக் கணும்னு இல.கணேசன் தீவிர முயற்சியில் இருக்காரு. இதற்காக ஆர்.எஸ்.எஸ்ஸின் சீனியர் தலைவரான சூரிங்கிறவரையும் இல.கணேசன் சந்திச்சிருக்காராம். கோவை சி.பி.ராதா கிருஷ்ணன் தன் பங்குக்கு முயற்சி பண்ணிக் கிட்டிருக்காரு. மோகன்ராஜுலுவைத் தலைவ ராக்கணும்ங்கிறது பொன்.ராதாகிருஷ்ணனோட மூவ். ஒருவேளை அது ஒர்க் அவுட் ஆகாவிட்டால், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவர் பதவிக்குப் பரிந்துரைத்து, அதன் மூலம் கட்சியைத் தன் கண்ட்ரோலில் வச்சிக்கலாம்னும் கணக்கு போடுறாராம். இவங்க கணக்கெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், அமித்ஷா போட்டிருக்கும் கணக்குதான் முக்கியம்னும் அவர் இன்னும் தமிழக நிலவரம் பற்றி முடிவெடுக்கலைன்னும் சொல்றாங்க.''

 என்ன எதிர்பார்க்குறீங்க?

சசிகலாவின் கணவர் நடராஜனின் ஜாமீன் மனு, சைதாப்பேட்டை பெருநகர நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் விசாரணை நீதிபதி ஆதிநாதன் முன்பு 17-ந்தேதி வந்தபோது, நடராஜன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபிநாத், ""கராத்தே வீரர் ஹுசைனி 75 லட்சம் ரூபாய் ஏமாற்றிவிட்டார். இதுதொடர்பாக அவர் மீது திருவான்மியூர் போலீஸில் புகார் கொடுத்தபோது அதனை எடுத்துக்கொள்ளவில்லை. 

ஆனால், அன்றைய தினம் மாலையில் கமிஷனர் அலுவலகத்தில் நடராஜன் மீது ஹுசைனி கொடுத்த புகார் ஏற்கப்பட்டு எஃப்.ஐ.ஆர். போடப்படுகிறது. இந்த வழக்கு பணம் சம்பந்தப்பட்டது. நடராஜன் யாரையும் மிரட்டவில்லை. அவரிடம் துப்பாக்கியும் கிடையாது. பொய் வழக்குப் போட்டிருக்கிறார்கள். அதனால் அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்'' என்றார். அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான ஸ்டேட் பி.பி. சண்முகவேலாயுதம், ""தொடர்ந்து குற்றங்களை நடராஜன் செய்து வருகிறார். மிரட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவர் மீது இதுமாதிரியான வழக்குகள் ஏற்கனவே இருக்கிறது. அவர் வெளியே சுதந்திரமாக உலாவினால் பலரையும் மிரட்டுவார். சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார். அதனால் ஜாமீன் தரக்கூடாது'' என்று கூற, அதற்கு பதிலளிக்கும் விதமாக, ""நடராஜன் மீது மிரட்டல் வழக்குகள் இல்லை. நில அபகரிப்பு வழக்கு தான் இருக்கிறது. அதிலும் 2 பேர் வாபஸ் பெற்றுவிட்டார்கள். நடராஜனிடம் ஒன்றுமில்லை என்பதால்தான் 5 நாள் கஸ்டடி எடுத்த போலீஸார் ஒரே நாளில் திருப்பி அனுப்பிவைத்துவிட்டனர்'' என்றார் கோபிநாத். அதற்கு சண்முகவேலாயுதம், ""விசாரணைக்கு எந்த வகையிலும் நடராஜன் ஒத்துழைக்கவில்லை. சாப்பிடவும் தண்ணீர் குடிக்கவும் கூட வாயை திறக்கமாட்டேனுட்டார். இப்படியே 5 நாளும் இருந்தால் ஏதேனும் ஆய்டுமேன்னு பயந்துதான் ஒரே நாளில் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டோம்'' என்றார். உடனே கோபிநாத், ""அப்படின்னா உங்க போலீஸின் கெப்பாசிட்டி எப்படி இருக்குதுன்னு பார்த்துக்குங்க. அவர் வாயை திறந்து என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிறீங்க? எங்களுக்குப் புரியலை'' என்றார் அழுத்தமாக. இருதரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆதிநாதன், மாலையில் நடராஜனுக்கும் இளவழகனுக்கும் பெயில் தந்தார்.

ad

ad