புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூலை, 2014

ஜனாதிபதியின் நடவடிக்கை கேவலமானது; அசிங்கமானது சந்திரசிறி நியமனம் குறித்து சம்பந்தன் சீற்றம் 
வடக்கு மக்களின் இறைமைக்கு மதிப்பளிக்காமல், மக்களின் அமோக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு முதலமைச்சரிடம் நேரில் அளித்த வாக்குறுதியை
உதாசீனம் செய்து மீண்டும் ஆளுநராக முன்னாள் இராணுவத் தளபதி சந்திரசிறியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ நியமித்துள்ளார்.
 
ஜனாதிபதியின் இந் தத் தான்தோன்றித்தனமான  நடவடிக்கை கேவலமானது; அசிங்கமானது.'' இவ்வாறு கடும் சீற்றத்துடன் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
 
"மக்களின் இறைமையையும், மக்களின் பிரதிநிதிக்கு அளித்த வாக்குறுதியையும் அசிங்கப் படுத்திய ஜனாதிபதியையும், அவரால் நியமிக்கப்பட்ட புதிய ஆளுநரையும்  இனிமேல் நாம் எப்படி  மதிப்பது''  என்றும் அவர் கேள்வியயழுப்பியுள்ளார்.
 
"வடக்கு மாகாண ஆளுநராக சந்திரசிறியின் மீள் நியமனம், வடக்கு மாகாண சபைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் உட்பட சமகால அரசியல் நிலை வரங்கள் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருடன் எதிர்வரும் 9ஆம் திகதி மாலை யாழ்ப்பாணத்தில் கூடி ஆராய்ந்த பின்னர் மறுநாள் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும் ஈ.பி.ஆர்.எல்.எவ். சுரேஷ் அணியின் 34ஆவது மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ளேன்'' என்றும் சம்பந்தன் எம்.பி. கூறினார்.
 
இது தொடர்பில் அவர் நேற்று "உதயனி'டம் மேலும் தெரிவித் தவை வருமாறு: 
"முன்னாள் இராணுவத் தள பதியான சந்திரசிறியை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கி அவரின் இடத்திற்கு சிவில் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனத் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வடக்கு மக்கள் சரித்திர வெற்றியடைய வைத்தனர். 
 
இதனையடுத்து தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் வடக்கு மாகாண சபை வந்த பின்னர் நடைபெற்ற இரண்டாவது அமர்வில் மாகாண சபையின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி சந்திரசிறியை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கி அவரின் இடத்திற்கு சிவில் பிரதிநிதி ஒருவரை நியமிக்கவேண்டும் எனக் கோரி வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 
அதுமட்டுமன்றி, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ் வரனுக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பில், முன்னாள் இராணுவத் தளபதியான ஜி.ஏ.சந் திரசிறியின் பதவிக்காலம் முடிவடைந்ததும், அவருக்கு எதுவித பதவி நீடிப்பும் வழங்கப்படாது என்றும், சிவில் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­, முதலமைச்சரிடம் உறுதி மொழி வழங்கியிருந்தார். 
 
ஆனால், வடக்கு மக்களின் இறைமைக்கு மதிப்பளிக்காமல், மக்களின் அமோக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு முதலமைச்சரிடம் நேரில் அளித்த வாக்குறுதியை உதாசீனம் செய்து மீண்டும் ஆளுநராக முன்னாள் இராணுவத் தளபதி சந்திரசிறியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ நியமித்துள்ளார்.
 
ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குத்தான் இருக்கின்றது என்பது அனை வரும் அறிந்த விடயம். ஆனால், மக்களின் இறைமையையும், மக்களின் பிரதிநிதிக்கு அளித்த வாக்குறுதியையும் ஜனாதிபதி அசிங்கப்படுத்தியுள்ளார். இவ்வாறான ஜனாதிபதியையும், அவரால் நியமிக்கப்பட்ட புதிய ஆளுநரையும் இனிமேல் நாம் எப்படி மதிப்பது?
 
ஜனாதிபதியின் இந்தத் தான் தோன்றித்தனமான நடவடிக்கை கேவலமானது; அசிங் கமானது. இதனைவிட வேறு எதனையும் நாம் கூற விரும்பவில்லை. அவ்வாறு கூறுவது எமக்கே வெட்கக்கேடானது'' என்று கடும் சீற்றத்துடன் தெரி வித்தார் கூட்டமைப்பின் தலை வர் சம்பந்தன் எம்.பி. 

ad

ad