புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2014


வட மாகாண சபை சிறப்பாக இயங்குகிறது: பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்-பி.பி.சி 

வட மாகாண சபை சிறப்பாக இயங்குவதாக இலங்கையின் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபைக்கு சென்ற வருடம் நடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை ரத்து செய்யுமாறு கோரி சிங்கள அமைப்புகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த போது  பிரதம நீதியரசர்  இதனைத் தெரிவித்தார்.
வட மாகாண சபை நன்றாக செயல்பட்டு வரும் நிலையில் இந்த மனுவை மேற்கொண்டு விசாரணை செய்வதால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை என்று நீதிபதி கூறினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலின் போது முன்வைத்திருந்த விஞ்ஞாபனத்தில் பிரிவினைவாதக் கருத்துகள் இடம்பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இந்த வழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சுமந்திரனோ, தமது தேர்தல் அறிக்கையில் பிரிவினைவாதம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வாதாடினார்.
நாட்டில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தே தமது தேர்தல் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் அரசியல் யாப்பு மீறப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த வாதத்தை ஏற்ற பிரதம நீதியரசர், தேர்தல் அறிக்கையில் பிரிவினைவாத கருத்துகள் உள்ளடக்கப்படவில்லை என உறுதிச் சான்றிதழ் ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்குமானால், வழக்கை முடித்துக்கொள்ள முடியும் என  நீதியரசர் மொஹான் பீரிஸ் கூறிய போது, சுமந்திரன் அதற்கு இணக்கம் தெரிவித்தார்.

ad

ad