புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூலை, 2014


முஸ்லிம் கலாசார உடைகளுக்கு பாடசாலைகள் அனுமதி வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
முஸ்லிம் பெற்றோர் தமது கலாசார உடைகளுடன் பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பாலிகா வித்தியாலத்திற்குள் முஸ்லிம் பெற்றோர் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்கப்படாமைக்கு எதிராக பெற்றோர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்று பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான நீதியரசர் குழுவின் முன் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
தமது கலாசார உடைகளை அணிவது பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான உரிமை என பிரதம நீதியரசர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய பாடசாலைகள் உட்பட அனைத்து பொது பாடசாலைகளிலும் முஸ்லிம் பெற்றோர் ஹிஜாப் அணி செல்ல அனுமதி வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹஜாப் அணிந்து பாடசாலைக்கு சென்ற போது, பாடசாலை அதிபர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என மனுதாரான பெற்றோர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
இதே பாடசாலை அதிபர் அங்கு பயிலும் இரண்டு முஸ்லிம் மாணவிகள் அணிந்து சென்ற பஞ்சாபி உடையை அணிந்து பாடசாலைக்கு வரக் கூடாது என அறிவித்திருந்தார்.
இது தொடர்பான வேறு ஒரு அடிப்படை உரிமை மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் அது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.

ad

ad