வியாழன், ஜூலை 17, 2014


யாழ். நகரப் பகுதியில் கூட்டமைப்புக்கு எதிராக அநாமதேய சுவரொட்டிகள்
யாழ். நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாண சபையை விமர்சித்து அநாமதேய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன
அவற்றல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்தமை தொடர்பாகவும், வடமாகாண சபையைக் குறை கூறியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் சுவரொட்டிகளில் எவரும் உரிமை கோரப்படவில்லை. அநாமதேய வசனங்களாகவே குறிப்பிடப்பட்டுள்ளன.