புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2014

]
அளுத்கம மோதல்கள் தொடர்பில் இரசாயன பகுப்பாய்வுகள் நடத்தப்படவில்லை: சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் ஆராய, அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஆய்வுகளுக்கு அழைக்கப்படவில்லை என களுத்துறை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 15 ஆம் திகதி ஏற்பட்ட மோதல்களில் இருவர் உயிரிழந்து 120 வீடுகள் அழிக்கப்பட்ட போதும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் அழைக்கப்படவில்லை என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய, செயலாளர் அஜித் பத்திரண மற்றும் சங்கத்தின் உறுப்பினர் பந்துல வீரசிங்க ஆகியோர் மேலதிக நீதவான் அயேஷா ஆப்தீன் முன்னிலையில் இதனை தெரிவித்துள்ளனர்.
மோதல்களில் கொல்லப்பட்ட மொஹமட் ரில்வான் மற்றும் மொஹமட் முஸ்தீன் ஆகியோரை மரண விசாரணைகள் இன்று நடைபெற்ற போதே அவர்கள் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.
மரணத்திற்கு பின்னரான பிரேத பரிசோதனை மற்றும் இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து இந்த இரு அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு மேலதிக நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

ad

ad