புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூலை, 2014

கணேசன்-வனிதா கள்ளக்காதலில் நடந்தது என்ன? திடுக்கிடும் தகவல்

சிதம்பரம் அண்ணாமலைநகர் பொலிஸ் நிலைய துணை ஆய்வாளராக இருந்த கணேசன், கள்ளக்காதலி வனிதா இருவரைபற்றியும் பல திடுக்கிடும் தகவகல்கள் வெளியாகியுள்ளது.
சிதம்பரம் அருகே சி.முட்லூரை சேர்ந்த வனிதா, தையாகுப்பத்தை சேர்ந்த கலைமணி இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில், சிதம்பரத்தில் படிக்கும் மகன் சபரியை, பள்ளியில் விடுவதற்காக வனிதா அழைத்து செல்லும்போது பேருந்து ஓட்டுனருக்கும் வனிதாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
ஒருமுறை இருவரும் பிச்சாவரம் சுற்றுலா மையத்துக்கு சென்றபோது வனிதா பர்தா அணிந்திருந்ததை பார்த்த முஸ்லிம்கள் சந்தேகமடைந்து வனிதாவை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த வழக்கில் வனிதாவை விசாரிக்கும் பொறுப்பு கணேசனிடம் வந்ததால், விசாரணையில் அவர் அழகில் மயங்கியுள்ளார்.
இதையடுத்து, உனது கள்ளக்காதலை கணவருக்குச் சொன்னால் உனக்கு வாழ்க்கையே போய் விடும் எனவே என்னுடன் வந்து விடு என்று கூறியுள்ளார்.
இதனை ஏற்றுகொண்ட வனிதா, கணேசனுடன் பழக தொடங்கியதில் கணவரையும் பெற்ற பிள்ளையையும் மறந்து கணேசனுடன் ஊர் ஊராக சுற்றத் தொடங்கியுள்ளார்.
கணேசனும் வனிதாவை விதம் விதமாக உடைகள் கொடுத்து, தனது சீருடையை அணிவித்து அழகுபார்த்துள்ளார்.
இந்நிலையில் நீ விவாகரத்து பெற்று விடு, உன்னைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று கணேசன் கூற வனிதாவும், உடனடியாக கணவரை விட்டுப் பிரிந்து, பிள்ளையையும் வேண்டாம் என்று உதறியுள்ளார்.
இதையடுத்து இருவரும் முதலில் சிதம்பரம் அண்ணாமலை நகரிலும், பின்னர் புதுச்சேரியிலும் குடித்தனமும் செய்துள்ளனர்.
பின்னர் திடீரென தனது நிலையிலிருந்து மாறிய கணேசன் சத்யா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
இதை சற்றும் எதிர்பாராத வனிதா, பழி தீர்க்க முடிவு செய்து கணேசனை கொலைசெய்துள்ளார்.
மேலும், கணேசனின் அப்பாவும், அம்மாவும் இறந்து விட்டதால் சிறு வயதிலிருந்தே அவர் கட்டுப்பாடில்லாமல் வாழ்ந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ad

ad