புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2014

வடக்கின் அபிவிருத்தி மற்றும் கரையோர பாதுகாப்பு குறித்து அவுஸ்திரேலிய குழு ஆராய்வு 
இலங்கையில் உள்ள கடற்கரை கரையோரங்களிலான பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கான நடவடிக்கையை
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய நாட்டின் குடிவரவு மற்றும் கரையோர எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் ஸ்கொட் மொரிஸன் தெரிவித்தார்.
 
 
அவுஸ்திரேலியா நாட்டின் குடிவரவு மற்றும் கரையோரஎல்லைப் பாதுகாப்பு அமைச்சர் ஸ்கொட் மொரிஸன் மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகர் ரொபின் மூடி அடங்கிய ஐவர் அடங்கிய குழுவினர்கள்
வடமாகாணத்தில் கரையோர பாதுகாப்பு மற்றும் வடக்கின் அபிவிருத்திகளை நேரில் கண்டறியும் நோக்கில் இன்று  யாழ். மாவட்டத்திற்கு விஐயம் செய்தனர். 
 
இவர்கள் இன்று  யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவகத்தில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறியை சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் இக் கருத்தினை அவுஸ்திரேலியா நாட்டின் குடிவரவு மற்றும் கரையோர எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்பவர்கள் மீண்டும் அவர்கள் தமது சொந்த  நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்குரிய நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
மேலும் அவுஸ்திரேலியாவுக்கும்,இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் வடக்கில் பல்வேறு அபிவிருத்திதிட்டங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்தெரிவித்தார்.இதனூடாக இலங்கைக்கான ஆதரவை வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தயாராகயிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 
 
 
 

ad

ad