புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூலை, 2014

பதவி கவிழ்க்கப்படலாம் என்ற அச்சத்தில் ஜனாதிபதி; ஏ.எவ்.பி

23.07.2014

பதவி கவிழ்க்கப்படலாம் என்ற அச்சத்தில் ஜனாதிபதி; ஏ.எவ்.பி
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச, தான் பதவி கவிழ்க்கப்படலாம் என்ற அச்சத்தில் சிக்கியிருக்கிறார் என பெயர் குறிப்பிட விரும்பாத அமைச்சர்  ஒருவரை மேற்கோள் காட்டி ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.
அதன் காரணமாக, தனது அதிகாரத்தின் பிடியை இறுக்கமாக்கிக் கொள்வதற்காக அவர் மக்களை மௌனமாக்க முயல்கிறார் என மனித உரிமை பணியாளர்கள் மற்றும் அரச அமைச்சர் ஆகியோர் தெரிவித்துள்ளதாக அச்செய்தி மேலும்  தெரிவித்துள்ளது.
 
சமீபத்தில் அரசசார்பற்ற அமைப்புகளுக்கு எதிராக விடுக்கப்பட்ட உத்தரவுக்கு இந்த அச்சமே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அரசு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை கருத்திற்கொண்டே தனக்கு எதிரான குரல்களை மௌனமாக்க முயல்வதாக அரச சார்பற்ற அமைப்புகளின் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
நாடு ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் வேளையில், அரசு தனது நிலை ஆட்டம் காண்பதாக உணர்கிறது, அதன் காரணமாகவே அரச சார்பற்ற அமைப்புகளுக்கு எதிரான உத்தரவு வெளியானது என ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.
 
இதேவேளை, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதற்காக யு.எஸ்.எயிட் நிறுவனம் முன்னெடுக்க இருந்த திட்டம் காரணமாக அரசு கடும் அச்சமடைந்தது.
 
ஆட்சி மாற்றத்திற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என அரசில் உள்ள சிலர் அச்சமடைந்துள்ளனர் என பெயர் குறிப்பிட விரும்பாத அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
இவ்வாறு ஏ.எவ்.பி செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளது.
பதவி கவிழ்க்கப்படலாம் என்ற அச்சத்தில் ஜனாதிபதி; ஏ.எவ்.பி
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச, தான் பதவி
கவிழ்க்கப்படலாம் என்ற அச்சத்தில் சிக்கியிருக்கிறார் என பெயர் குறிப்பிட விரும்பாத அமைச்சர் ஒருவரை மேற்கோள் காட்டி ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad