புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூலை, 2014



""இரண்டாவது முறையாகவும் மஞ்சுநாதா பெயரை கொலீஜியம் பரிந்துரைச்சிருப்பதால மத் திய அரசு ஏற்றுக்கொண்டாக வேண்டிய சூழ்நிலை இருக்குது. அதே நேரத்தில், சுப்ரீம் கோர்ட் தலை மை நீதிபதி பதவியிலிருந்து ரிடையர்டான நீதியர சர் சதாசிவத்துக்கு லோக்பால் தலைமைப் பதவி கிடைக்கும்ங்கிற எதிர்பார்ப்பு இருந்தது. நிர்வாக காரணங்களால் அது லேட்டாகுது. அதனால சதா சிவத்தை கர்நாடக மாநில கவர்னரா நியமிக்க லாம்ங்கிற ஐடியா மோடி அரசுக்கு இருக்குதாம். இப்ப தமிழக ஆளுநர் ரோசய்யாதான் கூடுதல் பொறுப்பா கர்நாடகாவைப் பார்த்துக்குறாரு. சதாசிவம் கவர்னராக ஜெ.வும் ரகசிய வேலை பார்க்கிறாராம்.''

""பிரஸ் கவுன்சில் தலைவரும் சுப்ரீம்கோர்ட் முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜூ கிளப்பிய விவகாரம் பார்லிமெண்ட் வரைக்கும் பரபரப்பை உண்டாக்கிடிச்சி. பெயரைக் குறிப்பிடா மல் சென்னை ஹைகோர்ட் முன்னாள் நீதிபதி அசோக்குமாரோட நியமனத்தை அவர் விமர்சனம் செய்ததோடு, தி.மு.க.வுக்கு சாதகமா அசோக்குமார் இருந்ததாலதான், அவர் மீதான புகார்களையும் தாண்டி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தி.மு.க கொடுத்த நெருக்கடியால ஹைகோர்ட் பதவி நிரந்தரமாச்சுன்னு மார்கண்டேய கட்ஜூ சொன்னது பற்றி ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் வருதே..''

""கட்ஜூவோட கருத்துக்கு பிரபல வக்கீல் ஜெத்மலானி ஆதரவா சில கருத்துகளை சொல்லி யிருக்காரு. கட்ஜுவோட கருத்தை சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மறுத்திருக்காரு. முன்னாள் சட்ட அமைச்சர் பரத் வாஜும் அப்போது என்ன நடந்ததுன்னு சொல்லி யிருக்காரு. மார்கண்டேய கட்ஜுவின் விமர்சனம் பற்றி கலைஞர் கேள்விகள் எழுப்ப, கலைஞர் தன்னோட சொத்துகளை வெளிப்படுத்தத் தயாரான்னு கட்ஜ் வரிந்து கட்டி எழுதியிருந்தாரு. தேர்தல் வேட்புமனுவிலேயே கலைஞரோட சொத்துகள் பற்றி விவரம் இருக்குதுன்னும், கட்ஜு பாராட்டிய ஜெ.தான் சொத்துக் குவிப்பு வழக்கை எதிர்கொள்கிறார்னும் தி.மு.க வக்கீல்கள் சொல் றாங்க. இறந்துபோன நீதிபதியான  அசோக்குமார் பற்றி, சம்பவம் நடந்து 10 வருடம் கழித்துப் பேசி சர்ச்சையை உருவாக்கியிருக்கும் மார்கண்டேய கட்ஜு இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் பதவியில் நீடிப்பது சரியல்லன்னு அகில இந்திய பார் அசோஷி யேஷன் தலைவர் அகர்வால் சொல்லியிருக்காரு.''

""தி.மு.க.வுக்கு சாதகமா நீதிபதி அசோக்குமார் நடந்துக் கிட்டதாலதான் அவருக்கு ஹைகோர்ட் நீதிபதி பதவி நிரந்தரமாச்சுன்னு கட்ஜு சொல்லியிருக்காரு. ஆனா, அ.தி. மு.க ஆட்சியில் தி.மு.கவுக்கு எதிரா ஒரு முக்கியமான வழக்கில் உத்தரவு போட்டவரு தான் அசோக்குமார்னு கோர்ட் வட்டாரத்தில் சொல்றாங்கப்பா.. உண்மைதானே?''

""ஆமாங்க தலைவரே.. 2001-ல் ஸ்டாலின் இரண்டாவது முறையா சென்னை மேயரா தேர்ந்தெடுக்கப்பட்டப்ப, மாநக ராட்சியில் அ.தி.மு.க உறுப்பினர்கள்தான் அதிகமா இருந்தாங்க. அதனடிப்படையில் துணை மேயரா கராத்தே தியாகராஜனை தேர்வு செய்ய முடிவானது. தியாகராஜன் வந்தால் குடைச்சலா இருக்கும்னு நினைச்ச தி.மு.க தரப்பு, அவர் ஜெயிச்சதே செல்லாதுன் னும் அதுக்கு ஸ்டே தரணும்னும்  செஷன்ஸ் கோர்ட்டில் நீதிபதி அசோக்குமார்கிட்டே அவசர அவசரமா ஒரு மனு போட்டுது. மனு விசாரணைக்கு வந்தப்ப கராத்தே தியாகராஜ னும் கோர்ட்டில்தான் இருந் தாரு. இந்த கேஸை தேர்தல் கமிஷன்தான் விசாரிக்கணும்னு அவர் சொல்ல, வழக்கை விசாரிச்ச நீதிபதி அசோக்குமா ரும் ஸ்டே கொடுக்கலை. தி.மு.க.வோட எதிர்பார்ப்பு நிறைவேறலை. சென்னை மாநகராட்சியோட துணைமேயரா கராத்தே தியாக ராஜன்தான் தேர் வானாரு. அதுமட்டுமில்ல, ஒருவருக்கு ஒரு பதவி சட்டம் மூலமா எம்.எல்.ஏ ஸ்டாலின் தன்னோட மேயர் பதவியை ராஜினாமா செய்ய, அ.தி.மு.க.விலிருந்த துணை மேயர் கராத்தே தியாகராஜனே மாநகராட்சி நிர்வாகத்தை முழுமையா கவனிச்சாரு. எல்லாத்துக்கும் அடிப்படை, அசோக்குமாரின் உத்தரவுதான். செத்துப்போயிட்ட அவரைத்தான் தி.முக.வுக்கு சாதகமானவர்னு சொல்லி, இவ்வளவு விவாதங்களும் ஓடிக்கிட்டிருக்குதுன்னு கோர்ட் வட்டாரத்தில் பேசுறாங்க.''

""மார்கண்டேய கட்ஜூ விவகாரம் சம்பந்தமா சட்ட மன்றத்தில் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசணும்னு சொன்னதுக்கு அனுமதி தரலையே?''

""சட்டமன்றத்தில் எதுவும் பேச முடியலைன்னு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குமுறிக்கிட்டிருக்குதே.. .. 11 மாடி கட்டட விவகாரத்தின்போதே தே.மு.தி.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளோடு முன்கூட்டியே இந்த பிரச்சினை பற்றி பேசி, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட ணும்னு வலியுறுத்தியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தான். அந்தப் பிரச்சினை உள்பட பல விஷயங்களையும் பேச அனுமதிக்காததைக் கண்டிச்சி குரலெழுப்பிய தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டாங்க. தினமும் சட்டமன்றத்திற்கு வந்து, எதுவும் பேச வாய்ப்பில் லாம திரும்பிப்போவதைவிட, ஒட்டுமொத்தமா சஸ்பெண்ட் செய்தா ஊருக்குப்போய் வேலையைப் பார்க்கலாம்னு தி.மு.க எம்.எல்ஏ.க்கள் பலரும் நினைச்சாங்க. அதனால, அவங்க சஸ்பெண்ட் செய்யப்பட்டு வெளியே வந்தப்ப, சபாநாயகர் தனபால் வாழ்கன்னு சிலர் சொல்லியிருக்காங்க. ஆனா கலைஞர் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை விடுவதா இல்லை. உடனடியா தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை அறிவாலயத்தில் கூட்டி, சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடுன்னு பொதுக் கூட்டங்களை நடத்த முடிவெடுத்தாரு. 31-ந் தேதி சென்னையில் நடக்கிற பொதுக்கூட்டத்தில் அவரும் கலந்துக்கிறாரு. சட்டமன்றத்தில் உள்ள மற்ற எதிர்க்கட்சிகளும் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யணும்னு ஒண்ணா குரல் கொடுத்திருக்குது.''

 ""சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான தே.மு.தி.கவும் இதில் இணைந்திருக்குதே?''

ad

ad