புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூலை, 2014

மலேசிய விமான விபத்து: அழுகி சிதறிக்கிடக்கும் பிணங்கள்: பொருட்களை கொள்ளையடித்து செல்லும் பொதுமக்கள்
தர்லாந்து ஆம்ஸ்டர் டாமில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில்
பயணம் செய்த 298 பேரும் பலியாகினர்.
மலேசிய விமான விபத்து: அழுகி சிதறிக்கிடக்கும் பிணங்கள்:
 பொருட்களை கொள்ளையடித்து செல்லும் பொதுமக்கள்
இந்த விமானத்தை கிழக்கு உக்ரைனில் போராட்டம் நடத்தும் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. அதை கிளர்ச்சியாளர்கள் மறுத்துள்ளனர்.
இதற்கிடையே விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்கு ம் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஏராளமான உடல்கள் ஆங்காங்கே பல பாகங்களாக சிதறி கிடக்கின்றன. விபத்து நடந்து 2 நாட்களுக்கு மேலாகி விட்டதால் அவை அழுகி துர்நாற்றம் வீசுகின்றன.
சில உடல்கள் ரத்தம் மற்றும் சதையுடன் உடைந்த விமான பாகங்களுடன் ஒட்டிக் கிடக்கின்றன. விமானம் விழுந்து கிடக்கும் பகுதியில் ரத்தம் உறைந்து கிடக்கின்றது. இந்த தகவலை கிளர்ச்சியார்களின் தலைவர் இகோர் கிர்கின் தங்களது ருஸ்கயா வெஸ்னா இணைய தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே விபத்துக்குள்ளான மலேசிய விமானத்தில் அந்நாட்டு பிரதமர் நஜிப் ரசாக்கின் நெருங்கிய உறவுக்கார பெண் ஒருவரும் பலியாகி உள்ளார். அவரது பெயர் ஸ்ரீசிடி அமிரா. 83 வயதான இவர், பிரதமர் நஜிப்பின் பாட்டி ஆவார்.
இந்தோனேசியாவை சேர்ந்த இவர் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட புறப்பட்டு சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த தகவலை மலேசிய ராணுவ மந்திரி ஹிஷா முதீன் உசேன் உறுதிப்படுத்தியுள்ளார்.
விபத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 6 எய்ட்ஸ் நோய் நிபுணர்கள் பலியானதாக தகவல் வெளியாகி இருந்தன. தற்போது நிபுணர்கள் 100 பேர் அந்த விமானத்தில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
298 பேர் பலியான சோகம் ஒரு புறம் இருக்க விபத்து நடந்த இடத்தில் இறந்தவர்களின் உடமைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பயணிகளின் சூட்கேஸ்கள், காமிராக்கள், பாஸ் போர்ட்டுகள் மற்றும் பணம் உள்ளிட்ட அனைத்தும் மாயமாகிவிட்டன. அவற்றை அப்பகுதி மக்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

ad

ad