புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூலை, 2014


இலங்கைத் தமிழர் விவ­காரம் உள்­நாட்டு விட­ய­மாகும்!- பி.ரி.ஐ செய்தியை மறுக்கிறார் சேஷாத்ரி ஷாரி
இலங்கைத் தமிழர் விவ­காரம் உள்­நாட்டு விட­ய­மாகும். இந்த விவ­காரம் சர்­வ­தேச மயப்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டாது என்­பதே எமது நிலைப்­பா­டாகும் என்று பார­தீய ஜனதாக் கட்­சியின் தேசிய செயற்­குழு உறுப்­பி­னரும் வெளி­யு­றவுக் கொள்­கைக்­கான ஏற்­பாட்­டா­ள­ரு­மான சேஷாத்ரி ஷாரி தெரி­வித்­துள்ளார். 
இலங்கை இந்­திய வர்த்­தக வாணிப நட­வ­டிக்­கை­களில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாயின் தமிழர் விவ­கா­ரத்­திற்கு தீர்வு காணப்­பட வேண்டும் என்று இலங்­கை­யிடம் எடுத்­துக்­கூ­றி­யுள்­ள­தாக சேஷாத்­திரி சாரி தெரி­வித்­தாக பி.ரி.ஐ. செய்தி ஸ்தாபனம் சில தினங்­க­ளுக்கு முன்னர் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது.
இந்த செய்­திக்கு மறுப்பு தெரி­விக்கும் வகையில் அனுப்­பி­வைத்­துள்ள விளக்க அறிக்­கை­யி­லேயே சேஷாத்ரி சாரி மேற்­கண்­ட­வாறு சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ளா­தா­வது:
தமிழர் விவ­கா­ரத்­திற்கு தீர்வு காணப்­பட்­டாலே இலங்கை இந்­திய வர்த்­தக வாணிப நட­வ­டிக்­கை­களில் முன்­னேற்­றத்தை காண­மு­டியும் என்று நான் தெரி­வித்­த­தாக வெளி­யான செய்தி தவா­றா­னது. சிங்­கப்­பூரில் நடை­பெற்ற கருத்­த­ரங்கில் இவ்­வாறு நான் எந்தக் கருத்­த­தையும் தெரி­வித்­தி­ருக்­க­வில்லை.
நான் கடந்த 20ம் திகதி முதல் 22ஆம் திக­தி­வரை கொழும்­புக்கு விஜயம் செய்­தி­ருந்த போது அங்கு இடம்­பெற்ற கருத்­த­ரங்கு மற்றும் நேர்­கா­ணல்­களில் இலங்கை, இந்­திய உறவு தொடர்பில் எனது நிலைப்­பாட்­டினை விளக்­கி­யி­ருந்தேன்.
இலங்கை தமிழர் விவ­கா­ர­மா­னது உள்­நாட்டு விட­ய­மாகும். இதனை சர்­வ­தேச மயப்­ப­டுத்­து­வது கூடாது, இலங்­கையின் வர்த்­தக வாணிப செயற்­பாடு தொடர்பில் உயர்ந்த எண்­ணத்­தையே நாம் கொண்­டுள்ளோம்.
இரு தரப்பு வர்த்­தக வாணிப நட­வ­டிக்­கைளில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாயின், தமிழர் விகா­ரத்­திற்கு தீர்வு காணப்­பட வேண்டும் என்று நாம் கூறி­ய­தாக வெளி­யி­டப்­பட்ட செய்தி தவறானது மட்டுமல்ல, வெறுப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது.
அத்துடன் இலங்கை இந்திய உறவு தொடர்பான எனது நிலைப்பாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கின்றது  என்றார்.

ad

ad